வளையஎக்சீன் (Cyclohexene) C6H10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு நீரகக்கரிமம் ஆகும். இந்த வளைய ஆல்க்கீன் நுண்ணிய மணமுடைய ஒரு நிறமற்ற நீர்மம் ஆகும். இச்சேர்மமானது, பல தொழிலக செயல்முறைகளில் ஒரு இடைநிலைச் சேர்மமாகும். நீண்ட கால சேமிப்பு, ஒளி மற்றும் காற்றுக்கு வெளிப்படுத்தும்போது பெராக்சைடுகளை உருவாக்கும் காரணத்தால் பெரிய அளவிலான நிலைத்தன்மையைக் கொண்டிருப்பதில்லை.
தயாரிப்பு மற்றும் பயன்கள்
வளையஎக்சீனானது அசாகி வேதி நிறுவனம் உருவாக்கிய செயல்முறையினைப் பயன்படுத்தி பென்சீனை பகுதி ஐதரசனேற்றம் செய்வதால் தயாரிக்கப்படுகிறது.[3] இது முதலில் வளையஎக்சனாலாக மாற்றப்பட்டு பின்னர் ஐதரசன் நீக்கல்வினைக்கு உட்படுத்தப்பட்டு கேப்ரோலேக்டத்தின் முன்னோடிச் சேர்மமான வளையஎக்சனோனைத் தருகிறது.[4] வளையஎக்சனோனானது அடிபிக் அமிலம், மேலியிக் அமிலம், இருவளையஎக்சைல்அடிப்பேட்டு மற்றும் வளையஎக்சீன் ஆக்சைடு ஆகிய சேர்மங்களுக்கும் முன்னோடிச் சேர்மமாகும். மேலும், இது கரைப்பானாகப் பயன்படுகிறது.
ஆய்வக பரிசோதனைகள்
தொகுப்பு
கரிம வேதியியலில் தொடக்க நிலையில் உள்ள மாணவர்களுக்கான பொதுவான சோதனைகளில் ஒன்றாக இது உள்ளது. இந்த வினையில், அமிலத்தை வினைவேக மாற்றியாகக் கொண்டு வளையஎக்சனாலின் நீர் நீக்க வினை நிகழ்த்தப்பட்டு வடித்திறக்கல் முறையில் கிடைக்கக்கூடிய வளையஎக்சீனை வினைக்கலவையில் இருந்து பிரித்தெடுக்கப்பட வேண்டும்.
வளையஎக்சேனானது நாற்காலி வடிவ அமைப்பிற்கு அதிக முன்னுரிமை தருவதாக இருக்க, வளையஎக்சீனானது அரை-நாற்காலி வடிவ அமைப்பில் மிகுந்த நிலைத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது.[6] வளைய அமைப்பில், ஒவ்வொரு பிணைப்பையும் எதிரெதிரான நிலையைக் கொண்டிருப்பதற்கான முயற்சியானது நாற்காலி அமைப்பிற்கான முன்னுரிமைக்கான அடிப்படைக் காரணமாக உள்ளது. வளையஎக்சீனைப் பொறுத்தவரை, ஆல்க்கீனானது தள அமைப்பை மறைப்பு வெளி வடிவ அமைப்பிற்குச்(eclipsed conformation) சமானமான அமைப்பில் தள அமைப்பினைப் பெற்றுள்ளது.
↑Michael T. Musser "Cyclohexanol and Cyclohexanone" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005.எஆசு:10.1002/14356007.a08_217
↑Jensen, Frederick R.; Bushweller, C. Hackett (1969). "Conformational preferences and interconversion barriers in cyclohexene and derivatives". J. Am. Chem. Soc.91 (21): 5774–5782. doi:10.1021/ja01049a013.