அகோரம்

அகோரம் என்பது சிவபெருமானின் ஐந்து முகங்களில் அழிக்கும் பணிபுரியும் முகமாக கருதப்பெறுகிறது.

சிவத்தோற்றம்

சிவபெருமானை நோக்கி கடும் தவத்தில் ஆழ்ந்த படைப்பின் கடவுளான பிரம்மதேவனுக்கு, நெருப்பு மற்றும் வாள் ஆகியவற்றை தாங்கிய கரிய உருவத்தில் காட்சியளித்தார். இந்த உருவம் அகோரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தோற்றத்தில் சிவபெருமான் சிவமந்திரத்தினை லட்சம் முறை உச்சரிப்பவர்கள் கையிலையை அடைவர்கள் என்ற வரம் தந்தார். இத்தோற்றம் பற்றி மகாபுராணங்களில் ஒன்றான லிங்க புராணத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. [1]

சிவ முகம்

இது சிவபெருமானின் ஐந்து முகங்களில் மூன்றாவது முகமாகும். இம்முகம் கருப்பு நிறமுடையதெனவும், தெற்கு திசையை நோக்கி அமைந்துள்ளாகவும் அறியப்படுகிறது. சிவபெருமான் இம்முகம் வாயிலாக ருத்திர தாண்டவம் ஆடி அழிக்கும் பணிபுரிகின்றார்.பஞ்சபூதங்களில் நெருப்பின் தன்மை வாய்ந்ததாக இம்முகம் கருதப்படுகிறது.

சிவபெருமான் அகோர முகத்தி்லிருந்து விஜயம், நிசுவாசம், சுவாயம்புவம், அனலம், வீரம் ஆகிய ஐந்து ஆகமங்களை தோற்றுவித்தார். [2]

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=10974 இலிங்க புராணம்- தினமலர் கோயில்கள்
  2. http://www.ammandharsanam.com/magazine/April2012unicode/page027.php பரணிடப்பட்டது 2013-05-07 at the வந்தவழி இயந்திரம் ஆகம சாஸ்திரம் சுப்ரமணிய சிவாச்சார்யா அம்மன் தரிசனம் இணையதளம்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya