அருகிய இனம்
![]()
அருகிய இனம் ( Endangered species) என்பது, எண்ணிக்கைக் குறைவு, சூழல் மற்றும் இரைகொல்லல் அல்லது வேட்டை போன்ற நிகழ்வுகளினால் முற்றிலுமாக அழிந்து போய்விடக்கூடிய வாய்ப்புள்ள அச்சுறுத்தநிலை உயிரினத்தைக் குறிக்கிறது[2] பொதுவாக இங்கு குறிப்பிடப்படும் இனம் என்பது அறிவியல் வகைப்பாட்டு அடிப்படையிலான இனம் ஆகும். இத்தகைய அச்சுறுத்தநிலை உயிரினங்கள் மேலும் குறைந்து விடாமல் இருக்கவும், இயற்கை மூலவளங்களைப் பாதுகாக்கவும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் என்னும் அமைப்பு இத்தகைய வகைப்பாடுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றது. அச்சுறுத்தலுக்கு உள்ளானவை அல்லது பேரிடரிலுள்ளவை அல்லது பொதுவாக மிக அருகிய இனம் என்ற வகைப்பாட்டுக்கு அடுத்ததாக வைக்கப்பட்டுள்ள அழிந்துபோவதற்கான அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டுள்ள நிலையை விளக்கும் சிவப்புப் பட்டியல் என்ற வகைப்பாட்டில் அருகிய இனம் என்ற வகைப்பாடு இடம்பெறுகிறது. காடுவாழ் உயிரினங்களைப் பாதுகாக்கும் ப.இ.பா.ச இன் காப்பு நிலைப் பட்டியலில் இது இரண்டாவது அபாயநிலை வகைப்பாடாகக் கருதப்படுகிறது. ப.இ.பா.ச 2012 ஆம் வெளியிட்ட சிவப்புப் பட்டியலில் 3079 விலங்குகளும், 2655 தாவர இனங்களும் இடம்பெற்றிருந்தன. முன்னதாக 1988 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இந்த எண்ணிக்கை முறையே 1102 மற்றும் 1197 என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். பல நாடுகள் அருகிய இனங்களைக் காப்பதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன. வேட்டையாடுதலைத் தடை செய்தல், குறிப்பிட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களைக் கட்டுப்படுத்துதல், காப்பகங்களை அமைத்தல் போன்றவை இத்தகைய நடவடிக்கைகளுள் அடங்கும். அருகிய இனங்களில் மிகச்சிலவே இத்தகைய சட்டப் பாதுகாப்புகளைப் பெறுகின்றன. ஏனையவை உரியவர்களின் கவனத்தைப் பெறாமல் முற்றாகவே அழிந்து விடுகின்றன அல்லது நிச்சயமாக அழிந்துவிடக்கூடிய நிலையை அடைகின்றன. காப்பு நிலைகாப்பு நிலை என்பது ஓர் இனம் தற்போது அல்லது வருங்காலத்தில் பிழைத்திருக்குமா என்பதற்கான ஓர் அளவீடு ஆகும். ஓர் இனத்தின் காப்புநிலையை தீர்மானிக்கும் முன்னர் பல காரணிகள் ஆராயப்படுகின்றன. தற்பொழுது எஞ்சியிருக்கும் விலங்குகளின் எண்ணிக்கையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், நாளடைவில் அவற்றின் இனத்தொகையின் வளர்ச்சி அல்லது தளர்ச்சி, இனப்பெருக்க சாத்திய வீதம் அல்லது தெரிந்த ஆபத்துகள் போன்ற கூறுகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன[3].ப.இ.பா.ச இன் சிவப்புப் பட்டியல் என்ற காப்பு நிலைப் பட்டியல் உலகளாவிய வகையில் ஒரு சிறந்த தரப்பட்டியல் என்று கருதப்படுகிறது.[4] உலகின் 40 சதவீதத்திற்கும் அதிகமான உயிரினங்கள் அச்சுறுத்தநிலை ஆபத்ததில் இருப்பதாகக் கருதப்படுகின்றன[5].சர்வதேச அளவில் ஆபத்தான மற்றும் பிற அச்சுறுத்தலான இனங்களைப் பாதுகாக்க்கும் பல்லுயிர்பெருக்க அதிரடி திட்டங்களை உருவாக்குவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் 199 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன, அமெரிக்காவில் இத்தகைய திட்டங்கள் பொதுவாக சிற்றின மீட்பு திட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உலக அளவில் இனங்களின் காப்பு நிலையை பட்டியலிட்டு வரிசைப்படுத்துவதில் முதன்மை அமைப்பாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் விளங்குகின்றது. இவ்வமைப்பினால் காப்புநிலையை குறித்து வெளியிடப்பட்ட பட்டியல் IUCN சிவப்புப் பட்டியல் எனப்படுகின்றது. இந்த காப்புநிலைப் பட்டியலில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இனங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. சிவப்புப் பட்டியல்
சிவப்புப் பட்டியல் என்பது ஒரு உயிரியல் இனமானது அழிந்து போனதற்கான அல்லது அழிந்துபோவதற்கான அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டுள்ள நிலையை விளக்குகின்ற ஒரு வகைப்பாட்டு நிலைப் பட்டியலாகும். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் என்ற அமைப்பு இந்த சிவப்புப் பட்டியல் இனங்களின் வெவ்வேறு காப்பு நிலைகளை பட்டியலிடுகின்றது. இவற்றில் முக்கியமான சில வகைப்பாடுகள் இங்குத் தரப்பட்டுள்ளன. [1] பரணிடப்பட்டது 2010-07-24 at the வந்தவழி இயந்திரம் [6]:
அருகிய இனமாக மாறுவதற்கான காரணங்கள்பருவ நிலை அல்லது கால நிலை மாற்றம், காடுகளை அழித்தல், விலங்குகளை வேட்டையாடுதல் மற்றும் புவி வெப்பமாதல் போன்ற காரணங்களால் பல உயிரினங்கள்நோய்த்தொற்றுநோய்த்தொற்று அருகிய இனமாகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு பிரதேசத்திற்கு உரியனவாக இல்லாத பழங்கால இனங்கள், மனிதர்களால் அவ்விடத்திற்குக் கொண்டுவரப்பட்டு அறிமுகப்படுத்துவதனாலும், சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடிய வகையில் சில இனங்கள் அழிந்து போகலாம். அத்தகைய அறிமுக இனங்களை அன்னிய இனங்கள் அல்லது ஆக்கிரமிப்பு இனங்கள் என்று கூறலாம். சில நேரங்களில் ஆக்கிரமிப்பு இனங்கள் அவ்விடத்திலுள்ள பூர்வீக உயிரினங்களுடன் உணவிற்காக அல்லது இரையைப் பெறுவதற்காக சொந்த போட்டி போடுகின்றன. பிற சந்தர்ப்பங்களில், எதிர்பாராத புதிய இனங்களின் வருகை, ஒரு நிலையான சூழலியல் இருப்பின் பாதிப்புக்கும் வழியேற்படுகிறது. புதிய இனங்கள் நோய்த்தொற்றுடன் வரநேர்ந்தால் உள்ளுர் உயிரினங்களிடம் அந் நோயை எதிர்க்கும் சக்தி இல்லாமல் இருந்திருந்தால், அழிந்துபோகவும் நேரிடலாம். பாதுகாப்பு நடவடிக்கைகள்பாதுகாப்பான வளர்ப்புஅருகிய இனமாகவும், அருகிகொண்டிருக்கும் இனமாகவும் அறிவிக்கப்பட்டுள்ள உயிரினங்களை சிறப்பான மற்றும் பாதுகாப்பான முறையில் இனப்பெருக்கம் செய்து அவற்றை வளர்ப்பதனால் பாதுகாக்க முடியும். மரபியல் முறையில் இனங்களை உருவாக்குதல் மற்றும் பாதுகாத்தல்
மேலும் இந்த வகையான உயிரினங்களை தாக்கும் நோய்களிலிருந்து பாதுகாக்கலாம். உயிரியல் பூங்காக்கள், வனவிலங்கு காப்பகங்கள் போன்ற பாதுகாப்பு வசதிகள் கொண்ட கட்டுப்படுத்தப்பட்ட அமைப்புகளில் அரிய அல்லது அபாயகரமான இனங்களை இனப்பெருக்கம் செய்யும் செயல் கட்டுப்பாட்டு வளர்ப்பு எனப்படும். இக்கட்டுப்பாட்டுச் செயல்முறையால் அழிந்துவிடும் நிலையிலுள்ள விலங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அவை அழிந்து போகாமல் காப்பாற்ற இயலும் [7]. தனியார் பண்ணைகள்அழிந்துவரும் விலங்கினங்களை வளர்க்கவும் பாதுகாக்கவும் ஆரவமுள்ள தனியார் சேவை பணி புரிபவர்களுக்கு விலங்குகளை வளர்க்க சிறப்பு அனுமதி அளித்து பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு மேற்பார்வை செய்யலாம். அருகிவரும் சில இனங்களின் பட்டியல் மற்றும் வாழும் இடம்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia