ஆந்திரப் பிரதேச துடுப்பாட்ட அணி
ஆந்திரப் பிரதேச துடுப்பாட்ட அணி (The Andhra cricket team ) என்பது ஆந்திரப் பிரதேசம் சார்பாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடக்கூடிய இந்திய உள்ளூர் அணி ஆகும். இதன் உள்ளூர் மைதானம் விசாகப்பட்டினத்திலுள்ள மருத்துவர். ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி அரங்கமாகும். ஆனால் சில போட்டிகள் விசயவாடாவிலுள்ள அனந்தபூரில் நடைபெற்றது.[2] முன்னோட்டம்ரஞ்சிக் கோப்பை துவங்கிய 1953-54 ஆம் ஆண்டு முதல் அந்தத் தொடரில் இந்த அணி விளையாடி வருகிறது. 1961-62 ஆம் ஆண்டில் ரஞ்சிக்கோப்பை நடைபெறாத ஆண்டைத் தவிர. அக்டோபர் 2016இன் கணக்கின்படி இந்த அணி 297 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 42 வெற்றி, 127 தோல்விகள் மற்றும் 128 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன.[3] மேலும் 114 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 30 வெற்றிகள், 83 தோல்விகள் மற்றும் ஒரு போட்டிக்கு முடிவு பெறாமலும் உள்ளது.[4] சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia