கடப்பா
கடப்பா (தமிழ்: கடப்பை) இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இது அதே பெயர் கொண்ட மாவட்டத்தின் தலை நகரமாகவும் விளங்குகிறது. இது ஆந்திராவின் இராயலசீமை பகுதியில் உள்ள இது ஆந்திரப்பிரதேசத்தின் தென்மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. இது பெண்ணாறு ஆற்றின் தெற்கே ௮ (8) கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே உள்ள டெக்டோனிக் நிலப்பரப்பில் அமைந்துள்ள நல்லமலா மற்றும் பால்கொண்டா மலைகளால் நகரம் மூன்று பக்கங்களிலும் சூழப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் சிவப்பு இரும்பு மண் பகுதியில் உள்ளது. திருமலையின் மேற்கில் இருந்து மலைக்கு செல்லும் நுழைவாயில் என்பதால் இந்நகரம் "கடபா" ('வாசல்') எனப் பெயர் பெற்றது.[1][2][3] புவியியல் கூறுகள்௨௦௦௧ (2001) ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்த நகரத்தின் மக்கள்தொகை ௩,௨௫,௭௨௫ (3,25,725). வரலாறுபதினொன்றாம் நூற்றாண்டில் இருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை இது சோழமண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் ௧௫௬௫ (1565)-இல் முகலாயர்கள் இதைக் கைப்பற்றினர். ௧௮௦௦ (1800) முதல் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. புஷ்பகிரி, ரேணிகுண்டா, மற்றும் திருப்பதி இதன் அண்டை நகரங்கள் ஆகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia