இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
![]() இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையம் (Airports Authority of India, AAI) இந்தியாவில் உள்ள குடியியல் வானூர்தி நிலையங்களையும் ஏடிசி, சிஎன்எஸ் போன்ற வழிகாட்டு வசதிகளையும் இயக்குகின்ற பொறுப்புடைய நடுவண் அரசு அமைப்பாகும். இந்த அமைப்பு 125 வானூர்தி நிலையங்களை இயக்குகிறது; இவற்றில் 11 பன்னாட்டு வானூர்தி நிலையங்களும் 8 சுங்கச்சாவடியுள்ள நிலையங்களும் 81 உள்ளூர் நிலையங்களும் படைத்துறை வளாகங்களில் அமைந்துள்ள 25 குடியியல் நிலையங்களும் அடக்கமாகும். இந்திய வான்வெளி முழுமையாகவும் அடுத்துள்ள பெருங்கடல் பகுதிகளிலும் இது வான்வழி போக்குவரத்து மேலாண்மை சேவைகளை வழங்கி வருகிறது. பாதுகாப்பான வான்வழிப் பயணத்திற்காக தன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வானூர்தி நிலையங்களிலும் 25 மற்ற இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நிலத்தில் அமைந்த கட்டமைப்பையும் மேலாண்மை செய்கிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சிறு நவரத்தின மதிப்பைப் பெற்ற நிறுவனம் ஆகும். இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia