இலாகூர் அருங்காட்சியகம்
இலாகூர் அருங்காட்சியகம் (Lahore Museum) என்பது பாக்கித்தானின் இலாகூரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும். இது 1865 ஆம் ஆண்டில் ஒரு சிறிய இடத்தில் நிறுவப்பட்டது. 1894 ஆம் ஆண்டில் பிரிட்டிசு காலனித்துவ காலத்தில் இலாகூரில் உள்ள 'தி மால்' என்ற இடத்தில் அதன் தற்போதைய இடத்தில் திறக்கப்பட்டது. இலாகூர் அருங்காட்சியகம் பாக்கித்தானின் அதிகம் பார்வையிடப்பட்ட மற்றும் புகழ்பெற்ற அருங்காட்சியகமாகும். இது தெற்காசியாவின் முக்கிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். [1] இந்த அருங்காட்சியகம், கட்டிடத்தின் முன் நேரடியாக அமைந்துள்ள ஜம்ஸாமா துப்பாக்கியுடன் அமைந்துள்ளது. இரட்யார்ட் கிப்ளிங் எழுதிய புகழ்பெற்ற கிம் என்ற பிரிட்டிசு புதினத்தில் பிரபலமானது - அவரின் தந்தை அருங்காட்சியகத்தின் ஆரம்பகால கண்காணிப்பாளர்களில் ஒருவராக இருந்தார். பண்டைய இந்தோ-கிரேக்க மற்றும் காந்தார இராச்சியங்களிலிருந்து பௌத்தக் கலைகளின் விரிவான சேகரிப்புக்காக இந்த அருங்காட்சியகம் இப்போது புகழ்பெற்றது. இது முகலாயப் பேரரசு, சீக்கியப் பேரரசு மற்றும் இந்தியாவில் உள்ள பிரித்தானியப் பேரரசு ஆகியவற்றின் சேகரிப்பையும் கொண்டுள்ளது. [2] வரலாறு![]() ![]() இந்த அருங்காட்சியகம், முதலில் 1865-66 ஆம் ஆண்டில் 1864 பஞ்சாப் கண்காட்சிக்காக கட்டப்பட்ட ஒரு மண்டபமான தற்போதைய தோலிண்டன் சந்தையின் தளத்தில் நிறுவப்பட்டது . தற்போதைய கட்டிடம் 1887 ஆம் ஆண்டில் நடைபெற்ற விக்டோரியா மகாராணியின் பதவியேற்ற ஐம்பதாவது ஆண்டு விழாவின் நினைவாக கட்டப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் திரட்டப்பட்ட ஒரு சிறப்பு பொது நிதி மூலம் நிதியளிக்கப்பட்டது. விக்டோரியா மகாராணியின் பேரன் இளவரசர் ஆல்பர்ட் விக்டர் என்பவரால் 1890 பிப்ரவரி 3 அன்றுபுதிய அருங்காட்சியகத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டிடம் நிறைவடைந்ததும், முழு அருங்காட்சியக சேகரிப்பும் அதன் புதிய பெயருடன் ஜூபிலி மியூசியம் என தற்போதைய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தின் சேகரிப்பு பின்னர் 1894 ஆம் ஆண்டில் இலாகூரின் பிரிட்டிசு கால மையத்தில் உள்ள தி மாலில் உள்ள தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது. [1] தற்போதைய கட்டிடத்தை பிரபல கட்டிடக் கலைஞர் சர் கங்கா ராம் வடிவமைத்துள்ளார். இரட்யார்ட் கிப்ளிங்கின் தந்தை ஜான் லாக்வுட் கிப்ளிங், அருங்காட்சியகத்தின் முதல் கண்காணிப்பாளர்களில் ஒருவராக இருந்தார். அவருக்குப் பிறகு கே.என்.சீதாராம் பதவிக்கு வந்தார். 2005 இல் 250,000 பார்வையாளர்கள் இதை பார்வையிட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தொகுப்புகள்இந்த அருங்காட்சியகத்தில் ஏராளமான கிரேக்க-புத்தச் சிற்பங்கள், முகலாய மற்றும் பஹாரி ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. [1] இந்த தொகுப்பில் சிந்து சமவெளி நாகரிகம், காந்தாரம் மற்றும் கிரேக்க-பாக்திரியா காலங்களிலிருந்து முக்கியமான நினைவுச்சின்னங்கள் உள்ளன. காந்தாரக் காலத்தைச் சேர்ந்த நோன்பு புத்தர் சிலை, மிகவும் மதிப்புமிக்க மற்றும் புகழ்பெற்ற பொருட்களில் ஒன்றாகும். நுழைவு மண்டபத்தின் மேல் உச்சியில் புகழ்பெற்ற பாக்கித்தான் கலைஞர் சாடெக்வெய்ன் என்பவர் 1972 மற்றும் 1973 ஆம் ஆண்டுகளில் ஒரு பெரிய சுவரோவியத்தை உருவாக்கியுள்ளார். [2] [3] இந்த அருங்காட்சியகத்தில் முகலாய மற்றும் சீக்கிய பானியில் செதுக்கப்பட்ட மரவேலைகளின் சிறந்த மாதிரிகள் உள்ளன. மேலும், பிரிட்டிசு காலத்திற்கு முந்தைய ஓவியங்களின் பெரிய தொகுப்பும் உள்ளது. இந்த தொகுப்பில் இசைக்கருவிகள், பழங்கால நகைகள், நெசவு, மட்பாண்டங்கள் மற்றும் ஆயுதக் களஞ்சியங்களும், சில திபெத்திய மற்றும் நேபாள வேலைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. [1] [2]
தொகுப்புவரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து ( மொகென்சதாரோ மற்றும் அரப்பா நாகரிகங்கள்) இந்து சாகி காலம் வரையிலான தொல்ல்லியல் பொருட்களை இந்த அருங்காட்சியகம் காட்சிப்படுத்துகிறது. [2] இது பாக்கித்தானில் தொல்பொருள், வரலாறு, கலைகள், நுண்கலைகள், பயன்பாட்டு கலைகள், இனவியல் மற்றும் கைவினைப் பொருட்களின் மிகப்பெரிய தொகுப்புகளில் ஒன்றாகும். இது ஹெலனிஸ்டிக் மற்றும் முகலாய நாணயங்களின் விரிவான தொகுப்பையும் கொண்டுள்ளது. [1] பாக்கித்தான் ஒரு சுதந்திர நாடாக வெளிவருவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பாக்கித்தான் இயக்கம் தொடர்பான ஒரு புகைப்படத் தொகுப்பும் உள்ளது, . மேலும் படிக்க
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia