உலகம் சுற்றும் வாலிபன்
உலகம் சுற்றும் வாலிபன் (Ulagam Sutrum Valiban) 1973ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. ஆர் தயாரித்து இயக்கிய இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். எம். ஜி. ஆர், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர். அதிக பொருட்செலவில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.[1] அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த திமுக, சுவரொட்டி விளம்பரங்களுக்கு வரியை உயர்த்தியமையால், சுவரொட்டிகள் இல்லாமலேயே விளம்பரம் செய்யப்பட்டது. நடிகர்கள்
பாடல்கள்இத்திரைப்படம் ம. சு. விசுவநாதன் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்.[2]
கருத்து சுதந்திரம்உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவரும் காலத்தில் எம்.ஜி.ஆர் திமுகவினை விட்டு விலகி, அதிமுக என்ற புதுக் கட்சியை தொடங்கியிருந்தார். அதனால் ஆளும் கட்சியாக இருந்த திமுக தரப்பு உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவருவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டது. திரைப்படத்தின் விளம்பரத்திற்கு பிரதானமாக சுவரொட்டிகளை மட்டுமே நம்பியிருந்த காலத்தில் சுவரொட்டிகளின் மீதான வரியை தமிழக அரசு ஏற்றியது. நிதி நெருக்கடி காரணமாக சுவரொட்டிகள் விளம்பரத்தினை எம்.ஜி.ஆர் தவிர்த்தார்.[1] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia