எசுப்பானிய அமெரிக்காவில் விடுதலைப் போர்கள்
![]() எசுப்பானிய அமெரிக்காவில் தன்னாட்சி முன்னேற்றம் வழமையான எசுப்பானிய சட்டத்தின் கீழான அரசு உச்சமைய இராணுவக் குழுவிற்கு விசுவாசமானவை அமெரிக்க இராணுவக் குழு அல்லது கிளர்ச்சியாளர்கள் தன்னாட்சி நாடு அறிவிப்பு அல்லது நிறுவல் மூவலந்தீவில் பிரான்சின் கட்டுப்பாடு உச்சத்தில் இருந்தபோது எசுப்பானிய அமெரிக்காவில் விடுதலைப் போர்கள் (Spanish American wars of independence) 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நெப்போலியப் போரின் போது பிரான்சு எசுப்பானியாவில் படையெடுத்த பிறகு, எசுப்பானிய அமெரிக்காவில் எசுப்பானியப் பேரரசிற்கு எதிராக தொடுக்கப்பட்ட பல போர்களைக் குறிப்பதாகும். இந்தச் சண்டைகள் 1809இல் துவங்கின; பிரான்சின் தாக்குதலின்போது சட்டமன்ற, செயலாக்க அதிகாரங்களை எடுத்துக்கொண்ட உச்ச மைய இராணுவக் குழுவிற்கு எதிராக சுக்கிசாக்காவிலும் கித்தோவிலும் ஆளுநருக்கு மாற்றாக உருவான ஆட்சிக்குழுக்கள் முதல் இயக்கமாக இருந்தன. 1810இல் மைய இராணுவக் குழு பிரான்சிடம் வீழ்ந்தபோது அமெரிக்காகளில் இருந்த எசுப்பானிய ஆட்புலங்களில் பல புதிய உள்ளக ஆட்சிக் குழுக்கள் தோன்றின. இந்த ஆட்சிக்குழுக்களுக்கும் எசுப்பானியாவிற்கும் இடையேயான சண்டைகளின் விளைவாக புதிய தன்னாட்சி நாடுகள் உருவாயின. தெற்கில் அர்கெந்தீனா, சிலியிலிருந்து வடக்கே மெக்சிக்கோ வரை இந்த சுதந்திர நாடுகள் உருவாயின. கூபாவும் புவர்ட்டோ ரிக்கோவும் எசுப்பானியாவின் ஆட்சியில் 1898இல் எசுப்பானிய அமெரிக்கப் போர் வரை நீடித்தன. மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia