எசுப்பானிய அமெரிக்காவிலுள்ள நாடுகளைக் காட்டும் நிலப்படம்.
அமெரிக்காக்களில் எசுப்பானியம் பேசும் மக்கள் வாழும் பகுதிகள்.
50%
30%
20%
10%
5%
2%
16வது,17வது, 18வது நூற்றாண்டுகளில் அமெரிக்காக்களில் இருந்த ஐரோப்பிய குடியேற்றங்களும் ஆட்பகுதிகளும்
எசுப்பானிய அமெரிக்கா (Spanish America) அல்லது இசுப்பானிக் அமெரிக்கா (Hispanic America) (எசுப்பானியம்: Hispanoamérica, América española அல்லது América hispana) அமெரிக்காக்களில் உள்ள எசுப்பானியம் பேசுகின்ற நாடுகள் அடங்கிய பகுதியாகும்.[1][2]
அமெரிக்காக்களில் எசுப்பானிய ஆதிக்கம் 1492இல் தொடங்கியது; 15ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரை, கண்டங்கள் கண்டறிபட்டதில் தொடங்கி பல்வேறு ஐரோப்பிய அரசுகள் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியாவில் பெரும்பகுதிகளையும் அரசுகளையும் கைப்பற்றிட்ட உலக வரலாற்றின் ஒரு அங்கமாகும். எசுப்பானிய அமெரிக்கா பரந்த எசுப்பானியப் பேரரசின் முதன்மை அங்கமாக இருந்தது.
1808இல் எசுப்பானியாவை நெப்போலியன் கையகப்படுத்திய பின்னரான குழப்பத்தில் எசுப்பானியப் பேரரசு பிளவுற்றபோது எசுப்பானிய அமெரிக்க ஆட்பகுதிகள் தங்கள் விடுதலைப் போர்களைத் துவக்கின. 1830ஆம் ஆண்டுவாக்கில், மீதமிருந்த பகுதிகள் பிலிப்பீன்சு தீவுக்கூட்டம், கியூபா, புவேர்ட்டோ ரிக்கோ தீவுகள் மட்டுமே; இவையும் 1898இல் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டது.
↑கீழ்காணும் அகரமுதலிகளில் பெரும்பாலான சொல்லகராதிகளிலும் இந்தப் பண்பாட்டு பகுதியைக் குறிக்க "எசுப்பானிய அமெரிக்காவே" இடம் பெற்றுள்ளது. சில "இசுப்பானிக்," "இசுபானிக் அமெரிக்க", "இசுப்பானோ-அமெரிக்க" என்பவற்றை "எசுப்பானிய அமெரிக்காவிற்கு" ஒத்தசொல்லாக குறிப்பிடுகின்றன. The American Heritage Dictionary of the English Language (3rd ed.) (1992). Boston: Houghton Mifflin. பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-395-44895-6. Merriam-Webster's Collegiate Dictionary (11th ed.) (2003). Springfield: Merriam-Webster. பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-87779-807-9. The Random House Dictionary of the English Language (2nd ed.) (1987). New York: Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-394-50050-4. Shorter Oxford English Dictionary on Historical Principles (2007). New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-19-920687-2. Webster's New Dictionary and Thesaurus (2002). Cleveland: Wiley Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-471-79932-0
↑"இசுப்பானிக் அமெரிக்கா" சில பழைய படைப்புக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது; சார்லசு எட்வர்டு சாப்மேனின் 1933 வருடத்திய குடியேற்றவாத இசுப்பானிக் அமெரிக்கா: வரலாறு மற்றும் 1937 ஆண்டின் ரிபப்ளிக்கன் இசுப்பானிக் அமெரிக்கா: வரலாறு (இரண்டும் நியூ யார்க்: தி மாக்மில்லன் கோ.); அல்லது மொழிபெயர்ப்பு படைப்புகளில் இசுப்பானோயமெரிக்கா என்பது நேரடியாக பயன்படுத்தப்படுகின்றது; எட்மண்டு இசுடூபன் உர்பன்சுக்கியின் (1978), இசுப்பானிக் அமெரிக்கா மற்றும் அதன் நாகரிகம்: எசுப்பானிய அமெரிக்கர்களும் ஆங்கிலோ-அமெரிக்கர்களும், நோ,்மன்: ஒக்லகாமா பல்கலைக்கழக அச்சகம்.
↑"Latin America" The Free Online Dictionary (American Heritage Dictionary of the English Language, 2000, 4th ed. Houghton Mifflin Company. Updated in 2003.)