கந்தப்பன் செல்லத்தம்பி
கந்தப்பன் செல்லத்தம்பி (பிறப்பு: மார்ச் 27, 1935) இவர் ஆரையூர் இளவல் என்று அறியப்பட்ட ஒரு ஈழத்து மூத்த நாடகக் கலைஞரும், எழுத்தாளருமாவார். வாழ்க்கைக் குறிப்புஇலங்கையின் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு, ஆரையம்பதி முதலாம் குறிச்சியில் கணகதிப்பிள்ளை கந்தப்பன், வெள்ளையர் குறிஞ்சிப் பிள்ளை தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த ‘செல்லத்தம்பி’ மட்டக்களப்பு ஆரையம்பதி ஆர்.கே.எம். வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்பு மட்டக்களப்பு கோட்டைமுனை ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம், நுகேகொட திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர்கல்வியைப் பெற்றார். இவரின் மனைவி தவமணிதேவி. இளஞ்திருமாறன், இளஞ்செழியன், இளந்திரையன், இளங்குமரன், பங்கயற் செல்வி, தவச்செல்வி, தமிழ்ச் செல்வி, தாமரைச் செல்வி, தாரகைச் செல்வி இவரின் பிள்ளைகள் தொழில்தொழில் ரீதியாக 1952 தொடக்கம் 1963 வரை எழுதுவினைஞராக அம்பாறை நதிப் பள்ளத்தாக்கு அபிவிருத்தி சபையில் பணியாற்றிய இவர், 1963.02.01 முதல் 1996.03.27 வரை கிராமசேவையாளராக (தரம் 01) பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். கலைத்துறை1948ஆம் ஆண்டு முதல் மேடை நாடகங்கள், நாட்டுக் கூத்து, கிராமியக் கலைகள் என்ற அடிப்படையில் இவரது கலைப்பயணம் தொடர்கின்றது. 1948ஆம் ஆண்டு அரசடி மகாவித்தியாலய மண்டபத்தில் இவரால் எழுதி, தயாரித்து, மேடையேற்றப்பட்ட ‘இராம இராச்சியம்’ எனும் நாடகமே இவரின் கன்னிப்படைப்பாகும். இதிலிருந்து மொத்தம் 85 நாடகங்களை எழுதித் தயாரித்து மேடையேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த 85 நாடகங்களும் 1948 முதல் 2007 வரை 1008 தடவைகளுக்கு மேல் மேடையேற்றம் செய்யப்பட்டுள்ளன. க. செல்லத்தம்பி ‘ஆரையூர் இளவல்’ எனும் பெயரிலே அதிகளவில் நாடகப் பணியை ஆற்றியுள்ளார். நாடகங்கள்இவரது நாடகங்களை பின்வரும் தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தலாம்.
புராதன நாடகங்கள்இவர் இதுவரை ஐந்து புராதன நாடகங்களை எழுதித் தயாரித்து மேடையேற்றியுள்ளார்.
இத்திகாச நாடகங்கள்இவர் இதுவரை ஒன்பது இத்திகாச நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார்.
இலக்கிய நாடகங்கள்இவர் இதுவரை நான்கு இலக்கிய நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார்.
வரலாற்று நாடகங்கள்இவர் இதுவரை பதினொரு வரலாற்று நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார்.
சமூக நாடகங்கள்இவர் இதுவரை ஐம்பத்தாறு சமூக நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார்.
சின்னத்திரையில்ஆரையூர் இளவலின் ‘மண் சுமந்த மகேசன்’ (மாணிக்கவாச சுவாமிகளின் சரிதம்) சின்னத்திரை வீடியோ நாடகமாகும். இந்நாடகத்தின் உள் அரங்கக் காட்சிகள் மட்டக்களப்பு ஆரையம்பதியிலும், வெளிப்புறக் காட்சிகள் மண்முனைப் பிரதேசத்திலும் படம் பிடிக்கப்பட்டன. 1980 சூன் 6 ஆம் நாள் மாணிக்கவாசகர் சுவாமிகள் குருபூசை தினத்தன்று இந்நாடகம் முதலாவது காட்சிக்கு விடப்பட்டு தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் ஆலய அரங்குகளிலும், பொது அரங்குகளிலும் காட்சியாக்கப்பட்டது. கிழக்கிலங்கையில் முதல் முயற்சியென கருதப்படும் இந்த சின்னத்திரை வீடியோ நாடகத்தினை கதை, வசனம், பாடல்கள், நெறியாள்கை செய்தவர் இவரே. வானொலியில்இவரின் ‘அலங்கார ரூபம்’ (தென்மோடி) 1971, ‘சுபத்திரா கல்யாணம்’ (வடமோடி) 1972 ஆகிய நாட்டுக்கூத்துப் பாடல்களும் 1974ஆம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் ஒலிப்பதிவு செய்யப்பட்டு மூன்று முறை ஒலிபரப்பியது. இலக்கியத்துறைநாடகத்துறையைப் போலவே இலக்கியத்துறையிலும் இவர் குறிப்பிடத்தக்க பணியினைப் புரிந்துள்ளார். இவரின் கன்னியாக்கம் ‘ஐந்து தலை நாகம்’ எனும் தலைப்பில் 1952ம் ஆண்டு ‘சுதந்திரன்’ பத்திரிகையில் பிரசுரமானது. அதிலிருந்து இதுவரை இருபத்தைந்து சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ள இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். எழுதியுள்ள நூல்கள்இவர் இதுவரை இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
மேலும் ஐந்து நூல்களை விரைவில் வெளியிடக்கூடிய நடவடிக்கையை மேற் கொண்டுள்ளார் என அறியமுடிகிறது.
பெற்ற கௌரவங்கள்இவரின் இத்தகைய பணிகளை கௌரவித்து பல சுயேச்சை நிறுவனங்களும், அரச நிறுவனங்களும் பல்வேறுபட்ட விருதுகளை வழங்கியுள்ளன. இலங்கை அரசினால் வழங்கப்படும் உயரிய விருதான ‘கலாபூசணம்’ விருது இவருக்கு 2007ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia