மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர்
மாணிக்கவாசகர்
பிறப்புதிருவாதவூர்
இயற்பெயர்திருவாதவூரடிகள்
தலைப்புகள்/விருதுகள்தென்னவன் பிரமராயன், நாயன்மார், மூவர்
தத்துவம்சைவ சமயம் பக்தி நெறி
மேற்கோள்நமச்சிவாய வாழ்க, நற்றுணையாவது நமச்சிவாயவே
நால்வர்
தலைப்புகள்/விருதுகள்நாயன்மார், சமயக்குரவர்
தத்துவம்சைவ சமயம் பக்தி நெறி

மாணிக்கவாசகர் (Manikkavacakar) சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் திருவாசகமும் திருக்கோவையாரும் ஆகும். இவர் பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டின் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராகப் பணியாற்றினார்.

மாணிக்கவாசகர், சிறந்த சிவ பக்தரான இரண்டாம் வரகுணன் (பொ.ஊ. 863–911) காலத்தில் வாழ்ந்தவர்.[1]

மாணிக்கவாசகர் பாடிய பக்திச் சுவையும் மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. "சிறை பெறா நீர் போல் சிந்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே" (பா.392) என்பதாலும், "இமைப் பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க." எனும் அடிகளால் தமிழின் அருட் திறத்தையும் வாதவூரரிற்கும் இறைவனுக்குமான நெருக்கத்தையும் உணரலாம். "நரியைக் குதிரைசெய்" எனும் திருநாவுக்கரசர் பாடல் மூலம் இவர் காலத்தால் அப்பருக்கு முந்தியவர் எனக் கருதப்படுகிறது.

ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் முக்தியடைந்தார் (சிவனடி சேர்ந்தார்).

இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், மணிமொழியார், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு.

வரலாறு

தல புராணத்திலிருந்து திரட்டிய தகவல்களாக அபிதான சிந்தாமணி கூறுவது: "திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார். அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான். தன் புலமையால் "தென்னவன் பிரமராயன்" எனும் பட்டத்தையும் பெற்றார்.

உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார்.

காலகட்டம்

மாணிக்கவாசகர் வாழ்ந்த காலகட்டம் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டு என்றும் பொ.ஊ. 13 அல்லது 14-ஆம் நூற்றாண்டு காலகட்டம் என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன.[2] சுந்தரருக்குப் பிற்பட்ட காலத்தவர் மாணிக்கவாசகர் என்பது ஆய்வாளர்கள் கருத்து. எனினும் மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் முற்பட்டவர் என்றும் சிலரால் கருதப்படுகிறது.[3]

ஜி. யு. போப் கருத்து

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான ஜி. யு. போப் மாணிக்கவாசரைப் பற்றி, "உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை" என்று குறிப்பிடுகின்றார்.[4]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "நால்வர் காலம்". www.thevaaram.org. Retrieved 2025-05-03.
  2. "Thiruvaasagam". www.tamilvu.org. Retrieved 2025-05-03.
  3. "Saivam - Tamil Virtual University". www.tamilvu.org. Retrieved 2025-05-03.
  4. தமிழ் இலக்கண நூல்; டாக்டர் ஜீ.யூ.போப்; பக்கம் 7-30

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya