கரிமாபாத்து, கில்கிட்-பால்டிஸ்தான்

கரிமாபாத்து
كريم آباد
நகரம்
பால்டிடி கோட்டை
பால்டிடி கோட்டை
கரிமாபாத்து is located in Gilgit Baltistan
கரிமாபாத்து
கரிமாபாத்து
கரிமாபாத்து
கரிமாபாத்து is located in பாக்கித்தான்
கரிமாபாத்து
கரிமாபாத்து
கரிமாபாத்து (பாக்கித்தான்)
ஆள்கூறுகள்: 36°19′59″N 74°39′58″E / 36.333°N 74.666°E / 36.333; 74.666
நாடுபாக்கித்தான்
நிர்வாகப் பகுதிவடக்கு நிலங்கள்
மாவட்டம்கன்சா
தலைநகரம்கரிமாபாத்து
மக்கள்தொகை
 (5,000 in 1992, 16,000 in 1996)
 • மொத்தம்16,000
நேர வலயம்ஒசநே+5 (பாக்கித்தான் சீர் நேரம்)

கரிமாபாத்து ( Karimabad ), முன்பு பால்டிட் என்று அழைக்கப்பட்ட இது பாக்கித்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள கன்சா மாவட்டத்தின் தலைநகரமாகும்.

சியா இசுலாத்தைச் சேர்ந்த இஸ்மாயிலி நிஜாரி சமூகத்தின் ஆன்மீகத் தலைவரான கரீம் ஆகா கானின் நினைவாக கரிமாபாத்து என்று பெயரிடப்பட்டது. இருப்பினும், பல உள்ளூர்வாசிகள் கரிமாபாத்தை அதன் பழைய பெயரான பால்டிட் என்றே குறிப்பிடுகிறார்கள்.

பால்டிட் கோட்டையிலிருந்து கன்சா பள்ளத்தாக்கின் தோற்றம்

கரிமாபாத்து நகரம் பாக்கித்தானின் வடக்குப் பகுதிகளில் அமைந்துள்ள கன்சா ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 8,200 அடி (2,500 மீட்டர்) உயரத்தில் ஒரு பள்ளத்தாக்கிற்குள் அமைந்துள்ளது. இந்த நகரம் கல் சுவர்கள் மற்றும் செங்குத்தான சாய்வான மொட்டை மாடிகளில் அதன் கட்டுமானத்தால் வகைப்படுத்தப்படுகிறது.[1] வரலாற்று ரீதியாக, கரிமாபாத்து காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு செல்லும் வழியில் இந்து குஷ் மலைகள் வழியாக பயணிக்கும் பயணிகளுக்கு தங்கி செல்லும் இடமாக இருந்தது. சுமார் 25,000 அடி (7,600 மீட்டர்) உயரத்தில் நிற்கும் ராகபோசி போன்ற பனி படர்ந்த மலை சிகரங்களின் பின்னணியில் இந்த நகரம் அமைந்துள்ளது. மேலும் அல்டர் நாலா போன்ற பனிப்பாறைகளாலும் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் ஆழமான பள்ளத்தாக்குகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. கில்கிட்டில் இருந்து செல்லும் மலைப்பாதை வழியாக இதனை அணுகலாம்.[2]

காலநிலை

கரிமாபாத்தின் வானிலை குளிர்ச்சியான மற்றும் மிதமான காலநிலையால் வகைப்படுத்தப்படுகின்றன. இது குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு உள்ள நகரமாகும். வறண்ட மாதத்தில் கூட அதிக மழை பெய்யும். கோப்பென் காலநிலை வகைப்பாடு என வகைப்படுத்துகின்றனர். இங்கு சராசரி வெப்பநிலை -5.4 °C | 22.3 °F. ஆண்டு மழைப்பொழிவு 860 மிமீ | 33.9 அங்குலம் என உள்ளது.[3]

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்

காடுகளில் உள்ள ஆப்பிள், பாதாமி, வால்நட், மல்பெரி, வில்லோ, பிர் மற்றும் பாப்லர் போன்ற மரங்களுடன் ரோஜாக்கள், பான்சிகள், அல்லிகள், ஜின்னியாக்கள் மற்றும் காஸ்மோஸ் ஆகிய மலர் தாவரங்களும் இங்கு காணப்படுகின்றன. [2]

கிராமத்தில் பதிவுசெய்யப்பட்ட விலங்கினங்கள் ஐபெக்ஸ், வாத்து, சிவப்பு-கோடுகள் கொண்ட நரி, பனிச்சிறுத்தை , மார்க்கோர் காட்டு ஆடு ( , மார்கோ போலோ செம்மறி , [[வளர்ப்பு யாக்| ஆகியவை அடங்கும்.[2]

வரலாறு

முன்பு பால்டிட் என்று அழைக்கப்பட்ட கரிமாபாத்து, முதலில் கன்சாவின் மிர் என்ற மன்னரால் ஆளப்பட்டது. பால்டிட் கோட்டை அந்த நேரத்தில் மிர் அரண்மனையாக செயல்பட கட்டப்பட்டது.[2][4] இந்த இடம் ஒரு பணிகளின் ஓய்வறைக்காகவும், அதன் அடிமை வர்த்தகத்திற்காகவும் அறியப்பட்டது.

பால்டிட் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை 750 ஆண்டுகளுக்கு மேலாக கன்சா பள்ளத்தாக்கின் தலைநகராக செயல்பட்டது. 1947 இல் பாக்கித்தான் ஒரு சுதந்திர நாடான பிறகு, மீரின் கட்டுப்பாட்டில் இருந்த கன்சா மாகாணம் தானாக முன்வந்து பாக்கித்தானுடன் இணைந்தது.[2][4] முன்னதாக, தலைநகர் பாலிட்டைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து புதிய கட்டிடங்கள் கட்டப்பட்ட மலைகளின் கீழ் பகுதிக்கு மாற்றப்பட்டது. இது புதிய தலைநகரான கரிமாபாத்து என ஆனது. காரகோரம் நெடுஞ்சாலையின் வளர்ச்சியைத் தொடர்ந்து, கைவினைப் பொருட்கள், விடுதிகள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் ஆகியவற்றைக் கையாளும் பல வணிக வளாகங்களுடன் புதிய நகரம் ஒரு சுற்றுலா இடமாக வளர்ந்துள்ளது. [4]

இந்தோனேசியா, ஆத்திரேலியா, இந்தியா மற்றும் பிரிட்டன் மற்றும் பிற நாடுகள் போட்டியிட்ட போதும் பால்டிட் கோட்டை மற்றும் கரிமாபாத்து கிராமம் இரண்டும் 2000 ஆம் ஆண்டில் உலக சுற்றுலா விருதைப் பெற்றன. [5]

மேற்கோள்கள்

  1. "Karimabad | Location, History, & Facts | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). Retrieved 2022-04-11.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Karimabad | Location, History, & Facts | Britannica" (in ஆங்கிலம்). Retrieved 2022-04-11.
  3. https://en.climate-data.org/asia/pakistan/gilgit-baltistan/karimabad-28463/
  4. 4.0 4.1 4.2 "Introducing Karimabad (Baltit)". Lonely Planet. Retrieved 14 November 2015.
  5. Naureen 2002, ப. 69.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Karimabad
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya