கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)
இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனை என்பது 22 சூன் 1941 முதல் 9 மே 1945 வரை ஐரோப்பிய அச்சு நாடுகள் மற்றும் அதன் ஆதரவு நாடு பின்லாந்து என்பன சோவியற் ஒன்றியம், போலாந்து மற்றும் சில வட, தென், கிழக்கு ஐரோப்பாவைச் சூழ்ந்திருந்த நேச நாடுகளுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் ஓர் சணண்டைக்களமாகும். இது அந்நாடுகளுக்கு ஏற்ப வேறுபட்ட பெயரினால் அழைக்கப்படுகிறது. முன்னாள் உரசிய ஒன்றியம் மகா தேசப்பற்றுப் போர் (உருசியம்: Великая Отечественная Война) எனவும், செருமனி கிழக்குப் போர்முனை (German: die Ostfront[3]), கிழக்குப் படையெடுப்பு (German: der Ostfeldzug) அல்லது உரசியப் படையெடுப்பு (German: der Rußlandfeldzug).[4] எனவும் அழைக்கின்றன. கிழக்குப் போர்முனைச் சண்டை வரலாற்றில் பாரிய இராணுவ மோதலாக அமைந்தது. சண்டை, பட்டினி, குற்றம், நோய் மற்றும் படுகொலை என்பவற்றால் ஏற்பட்ட முன்னோடியாயமையாத கொடூரம், பாரிய அழிவு, பெரும் வெளியேற்றம் மற்றும் பலவித வாழ்க்கையின் மிகப் பெரியளவு இழப்பு என்பன தனிச்சிறப்பு பெற்றுக் காணப்பட்டது. கிழக்குப் போர்முனையானது ஏறக்குறைய சகல மரண முகாம்கள், மரண ஊர்வலங்கள், பலாத்கார வாழ்விடம் மற்றும் யூதர்களுக்கெதிரான கலவரம் என்பவற்றால் பெரும் இன அழிப்புக்கு மத்தியமாகக் காணப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் 70 மில்லியன் மரணங்களில் அதிகளவாக 30 மில்லியன் பொதுமக்கள் மரணம் கிழக்குப் போர்முனையால் ஏற்பட்டது. கிழக்குப் போர்முனை இரண்டாம் உலகப் போரின் விளைவினை முடிவுக்கு கொண்டுவர, குறிப்பாக செருமனியின் தேற்காடிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது.[5][6][7] இது செருமனி படையின் அழிவு, ஏறக்குறை அரை நூற்றாண்டு செருமனியின் பிளவு மற்றும் இராணுவ, உற்பத்தி வல்லரசாக சோவியற் ஒன்றியம் உருவாக வழிவகுத்தது. பின்னணிகருத்தியல் பகைமை இருந்தபோதிலும் செருமனியும் சோவியற் யூனியனும் முதல் உலகப் போர் விளைவில் பரஸ்பர விருப்பமின்மையைப் பகிர்ந்து கொண்டனர். பிரஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கையைத் தொடர்ந்து சோவியற் யூனியன் கனிசமான பிரதேசங்களை கிழக்கு ஐரோப்பாவில் இழந்தது. செருமனியின் கோரிக்கைக்கு ஏற்ப போலந்து, லித்துவேனியா, எஸ்தோனியா, லவிட்டியா மற்றும் பின்லாந்து என்பவற்றின் கட்டுப்பாட்டை மைய சக்திகளுக்கு விட்டுக்கொடுத்தது. அதற்குப் பின்னர் செருமனி நட்பு நாடுகளிடம் சரணடைந்ததும் இப்பகுதிகள் 1919 பாரிஸ் சமாதான மாநாட்டின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டன. உரசியா உள்நாட்டு யுத்த நிலைமையில் இருக்கையில் நட்பு நாடுகள் போல்ஸ்விக் அரசை ஏற்றுக் கொள்ளவில்லை, அத்தோடு சோவியற் ஒன்றியம் அடுத்த 4 வருடங்களுக்கு உருவாகாமல் இருந்ததால் அங்கு உரசிய பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம் ஆகஸ்ட் 1939 கைச்சாத்திடப்பட்டது. நாசி செருமனி மற்றும் சோவிற் ஒன்றியத்திற்கிடையிலான இந்த வலிந்து தாக்காமை உடன்படிக்கை ஓர் இரகசிய நிபந்தனையைக் கொண்டிருந்தது. அதன்படி மத்திய ஐரோப்பா செருமனி மற்றும் சோவிற் ஒன்றியத்திற்கிடையில் பிரிக்கப்பட்டு முதல் உலகப் போருக்கு முன்னான நிலைக்குத் திரும்பும். பின்லாந்து, லித்துவேனியா, எஸ்தோனியா மற்றும் லவிட்டியா சோவியற் ஒன்றியத்திற்கும், போலந்து மற்றும் ருமேனியா அவற்றுக்கிடையில் பங்கிடப்படும். அன்ரூ நாகோர்ஸ்கியின் கூற்றுப்படி இட்லர் 11 ஆகஸ்ட் 1939 சோவியற் ஒன்றியத்தைத் தாக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் தெரிவித்ததாவது, "நான் மேற்கொள்வது எல்லாம் உரசியர்களுக்கு எதிராகவே செல்கின்றது. இதைப் புரிந்து கொள்ள மேற்குலகு மிக முட்டாள்களும் குருடர்களாகவும் இருந்தால், உரசியர்களுடன் ஓர் உடன்படிக்கைக்கு வர நிர்ப்பந்திக்கப்பட்டு மேற்கை தோற்கடித்து, பின்பு என் எல்லா படைகளுடன் சோவிற் ஒன்றியத்திற்கு எதிராகத் திரும்புவேன். எனக்கு உக்ரேன் தேவை. ஆகவே அவர்கள் கடைசி யுத்தத்தில் நடந்ததுபோல் அவர்கள் நம்மை பசியால் சாகச் செய்ய முடியாது." இரு சக்திகளும் போலாந்தின் மீது 1939 இல் படையெடுத்து பங்குபோட்டன. பின்லாந்து சோவித்தின் பரஸ்பர உதவிக்காக உடப்படிக்கையை நிராகரித்ததும், சோவிற் ஒன்றியம் பின்லாந்து மீது நவம்பர் 1939 இல் படையெடுத்தது. குளிர்காலப் போர் என அறியப்பட்ட இது ஒரு கசப்பான போராகவும் சோவியற் ஒன்றியத்திற்கு பகுதி வெற்றியை மட்டுமே கொடுத்தது. சூன் 1940 இல் சோவியற் பால்டிக் நாடுகள் மீது போர் தொடுத்து சட்டத்திற்குப் மாறாகவும் ஹகு உடன்படிக்கைக்கைக்கு எதிராகவும் மூன்று நாடுகளை இணைத்துக் கொண்டது. சோவியற் ஒன்றியத்திற்கும் பால்டிக் நாடுகளுக்கும் இடையிலான ஹகு உடன்படிக்கை பல மேற்குலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை.[8] மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம் ருமேனியாவின் வடக்கு, வடகிழக்கு பகுதிகள் மற்றும் பால்டிக் மீதான படையெடுப்புகளின்போது சோவியத்திற்கு பாதுகாப்பை வழங்கியது. ஆயினும், சோவியத் பால்டிக் மற்றும் ருமேனியாவை சேர்த்துக் கொண்டது செருமனியின் ஒப்பந்தம் பற்றிய புரிந்துணர்வை மீறிய செயல் என சோவியத் மீதான படையெடுப்பிற்கு இட்லர் காரணம் கூறினார். ருமேனியா நிலப்பதிகளை உக்ரைன் மற்றும் மோல்டா சோவிற் குடியரசுகளுக்கிடையே பிரிக்கப்பட்டன. கருத்தியல்கள்செருமன் கருத்தியல்அடால்ஃப் ஹிட்லர் தனது எனது போராட்டம் எனும் தன் சுயசரிதையில் செருமனியின் கிழக்கில் செருமன் குடியேற்றத்திற்காக புதிய இடங்களை எடுத்துக் கொள்ளல் பற்றி விவாதிக்கிறார். பிரதான இனமாக செருமனியர்களை குடியேற்றல், அதே நேரம் உள்ளூர்வாசிகளை அடியோடு அழித்தல் அல்லது அல்லது சைபீரியாக்கு அனுப்புதல், மிஞ்சியோரை அடிமை முறைக்கு பாவித்தல் ஆகிய கருத்துக்களை அவர் கொண்டிருந்தார்.[9] பேர்லின் கடும்போக்கு நாசிக்கள் (கிம்லர் போன்றோர்[10]), சோவிற் ஒன்றித்துக்கு எதிரான போரை பொதுவுடமைக்கு எதிரான நாசிசத்தின் போராட்டமாகவும், "குறை மனித" சிலாவிக் மக்களுக்கு எதிரான ஆரிய இனத்தின் போராட்டமாகவும் கருதினர்.[11] இட்லர் இதை தனி அர்த்தத்துடன் "முற்றிலும் அழிக்கும் போர்" என அழைத்தார். கிழக்கு முதன்மைத் திட்டம் என அழைக்கப்படும் திட்டத்தில், ஆக்கிரமிக்கப்படும் மத்திய ஐரோப்பா மற்றும் சோவியற் ஒன்றிய சனத்தொகையை மேற்கு சைபீரியா பகுதியாக வெளியேற்றல், பகுதியாக அடிமைப்படுத்தல் மற்றும் முடிவில் அழித்தல்; வெற்றி கொள்ளும் பகுதிகளை செருமனியால் அல்லது "செருமனியராக்கப்பட்ட" குடியேற்றக்காரர்களால் குடியேற்றத்திற்கு உட்படல் ஆகிய திட்டங்கள் உட்கொள்ளப்பட்டிருந்தது.[12] அத்துடன், நாசி நிகழ்ச்சித் திட்ட இலக்கான எல்லா பெரும் ஐரோப்பிய யூதர்களையும் பூண்டோடு அழித்தலின் பகுதியாக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய பாரிய யூத சனத்தொகையை இல்லாது ஒழித்தல் என்பதும் அதனுள் அடங்கும்.[13][14] செருமனியின் கீவ் சண்டை ஆரம்ப வெற்றியின் பிறகு ஹிட்லர் சோவிற் ஒன்றியத்தை இராணுவ ரீதியில் பலவீனமாகதாகக் கண்டார். ஒக்டோபர் 3, 1941இல் அவர் "நாம் கதவில் மாத்திரம் உதைக்க வேண்டும், அப்போது முழு பழுதடைந்த கட்டமைப்பும் உடைந்து விழ்ந்துவிடும்" என அறிவித்தார்.[15] இவ்வாறு செருமனி இன்னுமொரு மின்னலடித் தாக்குதலை எதிர்பார்த்த அதேவேளை நீண்ட போருக்கான தயார்படுத்தலை முக்கியமாக எடுக்கவில்லை. இருந்தபோதிலும், சோவிற் ஒன்றியத்தின் சுடாலின்கி்ராட் சண்டை வெற்றி மற்றும் செருமனி படைகளின் கிலியான சூழ்நிலை என்பவற்றைத் தொடர்ந்து ஹிட்லரும் நாட்சி கொள்கையும் இப்போர் மேற்கு நாகரீக செருமனி பாதுகாப்புக்கு எதிரான பொருமளவு "சோசலிச அவை நாடோடிகளின்" ஐரோப்பாவில் ஊற்றப்பட்ட அழிவு என அறிவித்தன. சோவியற் கருத்தியல்ஜோசப் ஸ்டாலினால் வழிநடத்தப்பட்ட சோவியற் நிர்வாகம் தங்கள் மாக்சிச லெனினிய கருத்தியலை (Marxism–Leninism) உலகப் புரட்சியை துரிதப்படுத்துதலுக்கு திட்டமிடச்செய்தது. படைகள்போர் சோவியற் ஒன்றியத்துக்கு எதிராக நாட்சி செருமனியினாலும் அதன் அணியில் இருந்த பின்லாந்தினாலும் கொண்டுவரப்பட்டது. உசாத்துணை
மேலதிக வாசிப்பு
வெளி இணைப்பு
|
Portal di Ensiklopedia Dunia