சனவரி 2009 முல்லைத்தீவு பொதுமக்கள் படுகொலைகள்சனவரி 2009 ஆம் ஆண்டில் இலங்கைத் தரைப்படை எறிகணை, வானூர்தித் தாக்குதல், நேரடித் தாக்குதல் மூலம் பல நூறு தமிழ்ப் பொதுமக்களை முல்லைத்தீவில் படுகொலை செய்தது. பெப்ரவரி 350 ஆயிரத்துக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்களும், 10 ஆயிரம் வரையான ஏற்கெனவே குடியிருந்த மக்களும் வாழ்ந்து வந்த சுதந்திரபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் 2:00 மணிவரை வரை சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலில் 55 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 45 பேர் காயமடைந்தனர்.[1] சனவரி 29சனவரி 29, 50 மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு, பல நூறு பேர்கள் காயமடைந்தனர்.[2] சனவரி 26சனவரி 26 மட்டும் 300 பேர் பாதுகாப்பு வலையம் என இலங்கை அரசால் அறிவிக்கபட்ட பகுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்காண மக்கள் காயம் அடைந்தனர்.[3] தொடர்ந்து மூர்க்கமான போரை எதிர்நோக்கிய மக்கள் உணவு, மருந்து, தங்குமிடம் இல்லாமல் இன்னல்களை எதிர்நோக்கினர். விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டுமனித உரிமைகள் கண்காணிப்பகம் மக்களை சுதந்திரமாக வெளியேற விடவில்லை என குற்றம்சாட்டியது. இலங்கைத் தரைப்படை புலிகள் மக்களை மனித கவசமாக பாவிப்பதாக குற்றம் சாட்டியது. இவற்றையும் பாக்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia