சப்போட்டா
சப்போட்டா (Manilkara zapota பொதுவாக sapodilla) சுவையான பழம் தரும் தாவரம். இது இந்தியா, பாக்கித்தான், மற்றும் மெக்சிக்கோவில் மிகுதியாக விளையக்கூடியது. தெற்கு மெக்சிக்கோ, நடு அமெரிக்கா, மற்றும் கரிபியன் நாடுகளுக்கு உரித்தான இவ்வகைப் பழங்கள்[1] எசுப்பானியக் குடியேற்றத்தின் போது பிலிப்பீன்சில் அறிமுகப்படுத்தப்பட்டது. குண்டுசப்போட்டா, வால்சப்போட்டா என இதில் வகைகள் உண்டு. பால்-சப்போட்டா தின்னும்போது உதடுகளில் பால் ஒட்டிக்கொள்ளும். கர்நாடகச் சப்போட்டாவில் இனிப்பு மிகுதி. பொதுவாகச் சப்போட்டாப் பழம் உடலுக்கு நல்லது. எனிலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை அதிக அளவு உண்ணக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.[2] இந்த பழம் பல மருத்துவக் குணங்களை உள்ளடக்கியுள்ளது. [3] மரத்தின் அமைப்புஇம்மரம் 60 முதல் 100 அடி உயரம் வளரக்கூடியது. இவற்றில் சிறிய வெள்ளைப் பூக்கள் பூக்கின்றன. இதனுடைய பழம் உருண்டையாக இருக்கும். சாப்பிடக் கூடியது. இம்மரத்திலிருந்து பால் போன்ற திரவம் கிடைக்கிறது, அது மீளும் தன்மை உடையது. இவற்றிலிருந்து மெல்லக்கூடிய “ஸ்வீம்கம்” தயாரிக்கிறார்கள்.[1][4] சிறப்பு பண்புஇம்மரத்தின் பட்டையைக் கீரி எடுக்கப்படும் பாலிலிருந்து 'ஸ்விம்கம்' தயாரிக்கிறார்கள். இதனுடைய பட்டையைக் கீரிய உடன் பால் போன்ற திரவம் சில மணி நேரத்தில் வடிந்துவிடுகிறது. பிறகு பல வருடம் கழித்து மீண்டும் இம்மரத்திலிருந்து பால் எடுக்கலாம். எடுக்கப்பட்ட பாலைச் சுட வைத்து கட்டியாக்கிய பிறகு இதனுடன் சர்க்கரை, மற்றும் வாசனை சேர்த்து நாம் பயன்படுத்தும் ‘ஸ்விம்கம்’ தயாரிக்கிறார்கள். காணப்படும் பகுதிகள்இம்மரத்தின் தாயகம் அமெரிக்கா ஆகும். 1850 ஆம் ஆண்டு மெக்சிகோவில் முதன் முதலில் 'ஸ்விம்கள்' தயாரித்தார்கள். காடுகளில் வளர்ந்த மரங்களில் இருந்து பால் எடுத்து வந்து தயாரித்தார்கள். இந்த சிக்கலட் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். படங்கள்
இவற்றையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia