சிங்ளேர் லுயிஸ்ஹாரி சிங்ளேர் லுயிஸ்(Harry Sinclair Lewis பிப்ரவரி 7, 1885 - ஜனவரி 10, 1951) ஒரு அமெரிக்க நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியர். 1930-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்க எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவர். "விறுவிறுப்புடைய, உயிர் சித்திரமான விவரிப்புகளுக்காகவும், பகடியும் நகைச்சுவையும் மிகுந்த கதாபாத்திரங்களை உருவாக்கியதற்காகவும்" இந்த விருதை பெற்றுள்ளார். அமெரிக்க முதலாளித்துவம் மற்றும் பொருள்முதல் வாதம் பற்றிய நுண்ணறிவு மிகுந்த நடுநிலையான எழுத்துக்களை முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுதியதற்காக அறியப்பட்டார். நவயுக வேலைக்கு செல்லும் மகளிரை உறுதியான கதாபாத்திரங்களாக எழுதியதற்காக மதிக்கப்பட்டார். எச்.எல்.மென்கென் "நமது இந்தக் கலைத்துறையில் அதிகாரப்பூர்வ நாவலாசிரியர் ஒருவர் உண்டென்றால், அது இந்த சிவந்த முடியுடைய மின்னசோட்டாவின் காடுகளில் இருந்து வந்த சூறாவளித்தான்" என்கிறார்.[1] ஐக்கிய அமெரிக்கக் குடியரசு தபால் நிறுவனம் "சிறந்த அமெரிக்கர்கள்" தொடரில், இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது.
ஆரம்பகால வாழ்க்கைசிங்ளேர் லூயிஸ் 1885 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 இல் மினசொட்டாவின் சாக் சென்டர் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை எட்வின் ஜே. லூயிஸ் மருத்துவர் கண்டிப்பானவர், தாயார் எம்மா கெர்மட் லூயிஸ் ஆவார். இவருக்கு இரண்டு ப்ரெட், கிளாட் என்ற இரு உடன்பிறப்புகள் இருந்தனர். சிங்ளெர் லூயிஸ் இளம் வயதிலேயே புத்தகங்களை படிக்க தொடங்கினார். தன்னுடன் நாட்குறிப்பொன்றும் வைத்திருப்பார். 13 ஆவது வயதில் எசுப்பானிய அமெரிக்க போரில் முரசடிப்பவராவதற்காக வீட்டில் இருந்து வெளியேறினார்.[2] 1902 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் யேல் பல்கலைக்கழகத்தில் தகுதி பெறுவதற்காக ஓபர்லின் அகாடமியில் சேர்ந்தார். ஓபர்லினில் இருந்தபோது மதத்தின் மீது ஆர்வம் கொண்டார். 1903 ஆம் ஆண்டில் யேல் பல்கலைக்கழகத்தில் இணைந்தார். 1908 ஆம் ஆண்டு வரை இளங்கலை பட்டம் பெறவில்லை. பின்னர் நாத்திகராக மாறினார்.[3] பணிலூயிஸின் ஆரம்பக்கால படைப்புகளான காதல் கவிதைகள், குறுகிய உருவரைதல்கள் என்பன யேல் கொரண்ட் மற்றும் யேல் இலக்கிய இதழ் என்பவற்றில் வெளிவந்தன. அதில் பதிப்பாசிரியரானார். மேலும் பத்திரிகைகளிலும், வெளியீட்டு நிறுவனங்களில் வேலை செய்தார். கதைகளை விற்று பணம் சம்பாதித்தார். 1912 ஆம் ஆண்டில் டாம் கிரஹாம் என்ற புனைப்பெயரில் என்ற முதல் புத்தகம் ஹைக் அண்ட் தி ஏர்ப்ளேன் வெளியிட்டார். 1914 ஆம் ஆண்டில் ஒவர் மிஸ்டர் ரென்: தி ரொமான்டிக் அட்வென்ச்சர்ஸ் ஆப் எ ஜென்டில் மேன், 1915 இல் டிரெயில் ஆப் தி ஹாக்: எ காமெடி ஆப் த சீரியஸ்னஸ் ஆப் லைப், 1917 இல் தி இன்னசென்ட்ஸ்: எ ஸ்டோரி பார் லவ்வர்ஸ், 1919 வுமன்ஸ் ஹோம் கம்பானியன் சஞ்சிகையில் இல் ப்ரீ ஏர் என்பன வெளிவந்தன. திருமணமும் குடும்பமும்லூயிஸ் 1914 ஆம் ஆண்டில் லோக் பத்திரிகையின் ஆசிரியரான கிரேஸ் லிவிங்ஸ்டன் ஹெகரை திருமணம் புரிந்தார். இவ் இணையருக்கு 1917 இல வெல்ஸ் லூயிஸ் என்ற புதல்வன் பிறந்தார். இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்க இராணுவ தளபதியாக பணியாற்றிய வெல்ஸ் லூயிஸ் 1944 அக்டோபர் 29 கொல்லப்பட்டார்.[4] லூயிஸ் 1925 ஆம் ஆண்டில் கிரேஸை விவாகரத்து செய்தார். 1928 இல் அரசியல் செய்தித்தாள் கட்டுரையாளரான தொரத்தி தாம்சனை மணந்தார்.[5] அவர்களுக்கு 1930 இல் மைக்கேல் லூயிஸ் என்ற மகன் பிறந்தார். இத் தம்பதியினர் 1942 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தனர். மைக்கேல் லூயிஸ் ஒரு நடிகரானார். மைக்கேல் லூயிஸ் குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு, 1975 ஆம் ஆண்டில் இறந்தார்.[6] வெற்றிகள்வாசிங்டன் டி.சி.க்குச் சென்றதும், லூயிஸ் எழுதுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1916 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், சிறு நகர வாழ்க்கையைப் பற்றிய ஒரு யதார்த்தமான புதினத்திற்காக குறிப்புகளை எடுக்கத் தொடங்கினார். 1920 ஆம் ஆண்டு அக்டோபர் 23 மெயின் ஸ்டிரிட் என்ற புதினத்தை வெளியிட்டார்.[7] மெயின் ஸ்டிரிட் முதல் ஆறு மாதங்களில் 180,000 பிரதிகள் விற்பனையாகியது.[8] சில ஆண்டுகளில் விற்பனை இரண்டு மில்லியனாக மதிப்பிடப்பட்டது.[9] 1922 ஆம் ஆண்டில் பாபிட் என்ற புதினத்தை வெளியிட்டார். 1925 இல் அரொஸ்மித் என்ற புதினத்தை வெளியிட்டார். இதற்கு புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது. லூயிஸ் மறுத்துவிட்டார்.[10] இந்த புதினத்தை தழுவி ஜான் போர்ட் இயக்கத்தில் ரொனால்ட் கோல்மன் நடிப்பில் ஹாலிவுட் திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் நான்கு அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 1927 ஆம் ஆண்டில் எல்மர் கேன்ட்ரி என்ற புதினத்தை வெளியிட்டார். இந்த புதினத்திற்காக பல மதத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். 1960 ஆம் ஆண்டில் பர்ட் லான்ஸ்டர் நடிப்பில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இதில் பர்ட் லான்ஸ்டர் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார். 1920 களின் பிற்பகுதியிலும் 1930 களிலும் லூயிஸ் பல சிறுகதைகளை பல்வேறு பத்திரிகைகளுக்கும் வெளியீடுகளுக்கும் எழுதினார். 1930 இல் லிட்டில் பியர் போங்கோ என்ற கதையை எழுதினார்.[11] சர்க்கஸில் இருந்து தப்பிக்க விரும்பும் கரடிக் குட்டியை பற்றிய கதையாகும். 1940 இல் இந்தக் கதையை வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் வாங்கியது. 1930 ஆம் ஆண்டில் லூயிஸ் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். இந்த விருதைப் பெற்ற அமெரிக்காவின் முதல் எழுத்தாளர் இவராவார். நோபல் பரிசை வென்ற பிறகு, லூயிஸ் மேலும் பதினொரு நாவல்களை எழுதினார். அவற்றில் பத்து நாவல்கள் அவரது வாழ்நாளில் வெளிவந்தன. இறப்புலூயிஸ் 1951 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி 65 வயதில் குடிப்பழக்கத்தால் மரணமடைந்தார். அவரது உடல் தகனம் செய்யப்பட்டு, அவரது எச்சங்கள் மினசோட்டாவின் சாக் மையத்தில் உள்ள கிரீன்வுட் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டன. 1951 இல் இறப்பிற்கு பின் அவரது இறுதி புதினமாகிய வேர்ல்ட் சோ வைட் வெளியிடப்பட்டது. லூயிஸின் நண்பரும் அபிமானியுமான வில்லியம் சிரேர் லூயிஸ் குடிப்பழக்கத்தால் இறக்கவில்லை எனவும் லூயிஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவர் வாழ விரும்பினால் குடிப்பதை நிறுத்துமாறு அவரது மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.[12] குறிப்புகள்
வெளி இணைப்புகள்நோபல் பரிசு அதிகாரப்பூர்வ தளத்தில் இவரது வாழ்க்கைக் குறிப்பு |
Portal di Ensiklopedia Dunia