சிவெத்லானா அலெக்சியேவிச்
சிவெத்லானா அலெக்சாந்திரோவ்னா அலெக்சியேவிச் (Svetlana Alexandrovna Alexievich, உருசியம்: Светлана Александровна Алексиевич; Belarusian: Святлана Аляксандраўна Алексіевіч பிறப்பு: மே 31, 1948) பெலருசிய புலனறியும் ஊடகவியலாளரும், கவிஞரும், உருசிய மொழி எழுத்தாளரும் ஆவார். இவருக்கு "நமது காலத்தின் துயரம் மற்றும் துணிச்சலின் நினைவுச் சின்னமாக இருக்கும் அவரது எழுத்திற்காக" 2015 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1][2][3][4][5] இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெறும் 14ஆவது பெண் இவராவார். வாழ்க்கைக் குறிப்புமேற்கு உக்ரைனிய நகரமான ஸ்தானிசுலாவில் பெலருசியத் தந்தைக்கும், உக்ரைனியத் தாயுக்கும் சிவெத்லானா பிறந்தார். சிவெத்லானா பெலருசில் வளர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் பல உள்ளூர் பத்திரிகைகளின் செய்தியாளராகப் பணியாற்றினார். பின்னர் பெலருடிய அரசப் பல்கலைக்கழகத்தில் பயின்று 1972 இல் பட்டம் பெற்றார். பின்னர் மின்ஸ்க் நகரில் வெளியாகும் நேமன் என்ற இலக்கியப் பத்திரிகையின் செய்தியாளராகப் பணியாற்றினார்.[6] இரண்டாம் உலகப் போர், ஆப்கான் சோவியத் போர், செர்னோபில் அணு உலை விபத்து, சோவியத் வீழ்ச்சி போன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டோருடனான தனது நேரடி உரையாடல்களை பத்திரிகைகளில் வெளியிட்டார். பெலருசின் லூக்கசென்கோ அரசின் ஆட்சியில் பெரிதும் பாதிப்புக்குள்ளான இவர்,[7] 2000 ஆம் ஆண்டில் பெலருசில் இருந்து வெளியேறி,[8] பாரிசு, பெர்லின் நகரங்களில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்து வந்தார். 2011 ஆம் ஆண்டில் மீண்டும் மின்ஸ்க் திரும்பினார்.[9] வெளியான ஆக்கங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia