செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா
செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா (Saint Helena, Ascension and Tristan da Cunha)[4] தெற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில் உள்ள பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலமாகும். இதில் செயிண்ட் எலனா தீவு, அசென்சன் தீவு மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா தீவுக்கூட்டமும் அடங்கியுள்ளன. செப்டம்பர் 1, 2009 வரை இவை செயின்ட் எலினாவும் சார்பு பகுதிகளும் என அழைக்கப்பட்டன. செப்டம்பர் 1, 2009இல் இயற்றப்பட்ட புதிய அரசியலமைப்பு இந்த மூன்று தீவுகளுக்கும் சமமான நிலையைத் தந்துள்ளது.[5] நிர்வாகப் பிரிவுகள்நிர்வாகத்திற்காக புவியியலை ஒட்டி இந்த ஆள்புலம் மூன்று பகுதிகளாக, செயின்ட் எலினா, அசென்சன், டிரிசுதான் டா குன்கா, பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் தனித்தனியான சட்டப்பேரவைகளால் ஆளப்படுகின்றன. செயின்ட் எலினாவின் சட்டப் பேரவைக்கு ஆட்புலத்தின் ஆளுநர் தலைமையேற்க, மற்றவற்றிற்கு நிர்வாக அதிகாரி தலைமை ஏற்கிறார்.
செயின்ட் எலினா தீவு மேலும் எட்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[6] மேற்சான்றுகள்
வெளியிணைப்புகள்![]() விக்கிமீடியா பொதுவகத்தில்,
செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா என்பதில் ஊடகங்கள் உள்ளன.
|
Portal di Ensiklopedia Dunia