சோடியம் முப்புளோரோ அசிட்டேட்டு
சோடியம் முப்புளோரோ அசிட்டேட்டு (Sodium trifluoroacetate) என்பது C2F3NaO2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் டிரைகுளோரோ அசிட்டேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. CF3CO2Na என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். முப்புளோரோ அசிட்டிக் அமிலத்தின் சோடியம் உப்பாக சோடியம் முப்புளோரோ அசிட்டேட்டு வகைப்படுத்தப்படுகிறது. முப்புளோரோமெத்திலேற்ற வினைகளுக்கு உரிய மூலமாக இதை பயன்படுத்துகிறார்கள்.[1] தயாரிப்பு50 சதவீத நீர்த்த முப்புளோரோ அசிட்டிக் அமிலத்துடன் சம அளவு சோடியம் கார்பனேட்டை கரைத்து சோடியம் முப்புளோரோ அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது. கரைசலை வடிகட்டி சிறப்பு கவனத்துடன் உப்பை சிதைவடைதலின்றி வெற்றிட ஆவியாக்கம் செய்ய வேண்டும். பெறப்படும் திண்மத்தை 100 பாகை செல்சியசு வெப்பநிலையில் உலர்த்தி பயன்படுத்தலாம்.[2] காரத்தன்மைசோடியம் முப்புளோரோ அசிட்டேட்டின் காடித்தன்மை எண் 0.23 ஆகும். 4.76 காடித்தன்மை எண் கொண்ட அசிட்டிக் அமிலத்துடன் ஒப்பிடுகையில் முப்புளோரோ அசிட்டேட்டு அயனியின் காரத்தன்மை மிகவும் பலவீனமானதாகும். இது கார்பாக்சிலேட்டு குழுவை ஒட்டிய மூன்று புளோரின் அணுக்களின் எலக்ட்ரான்-திரும்புதல் விளைவு இதற்கு காரணமாகும். ஐதரோகுளோரிக் அமிலம் அல்லது சல்பூரிக் அமிலம் போன்ற வலிமையான அமிலங்கள் முப்புளோரோ அசிட்டேட்டு அயனியை முப்புளோரோ அசிட்டிக் அமிலமாக புரோட்டானேற்றம் செய்ய இயலும்.
பொதுவாக, முப்புளோரோ அசிட்டேட்டு சமநிலையில் ஐதரோனியம் நேர்மின் அயனிகளுடன் வினைபுரிந்து முப்புளோரோ அசிட்டிக் அமிலத்தை உருவாக்குகிறது:
முப்புளோரோ அசிட்டிக் அமிலம் மற்றும் ஐதரோனியம் அயனிக்கு இடையே உள்ள காடித்தன்மை எண்ணில் உள்ள ஒற்றுமையின் காரணமாக ஐதரோனியத்துடனான பொதுவான வினை சமநிலையில் உள்ளது. பயன்முப்புளோரோமெத்திலேற்ற வினைகளுக்கு சோடியம் முப்புளோரோ அசிட்டேட்டு ஒரு பயனுள்ள வினையாக்கியாகும். ![]() இவற்றையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia