ஜார்ஜ் பெர்னாட் ஷாஜார்ஜ் பெர்னார்ட் ஷா (George Bernard Shaw சூலை 26,1856 - நவம்பர் 21950), இவரது சுய வற்புறுத்தலின் பேரில் பெர்னார்ட் ஷா என்று அழைக்கப்படுகிறார். இவர் ஒரு ஐரிய நாடக ஆசிரியர், விமர்சகர், மதக் கோட்பாடுகளுக்கு எதிரானவர் மற்றும் அரசியல் ஆர்வலர் ஆவார். இவரது தாக்கம் மேற்கத்திய நாடகம், கலாச்சாரம் மற்றும் அரசியலில் 1880ஆம் ஆண்டில் இருந்து தற்போதுவரை நீடிக்கிறது. மேன் அண்ட் சூப்பர்மேன் (1902), பிக்மேலியன் (1913) மற்றும் செயிண்ட் ஜோன் (1923) போன்ற பரவலாக அறியப்பட்ட படைப்புகள் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார். சமகால நிகழ்வுகளை நையாண்டி செய்யும் விதம் மற்றும் வரலாற்று கருத்துருவகம் செய்தல் ஆகியவற்றில் அவரது காலத்தில் சிறந்து விளங்கினார். 1925இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். வாழ்க்கைஆரம்பகால ஆண்டுகளில்டப்லின், போர்டோபெல்லோவில் உள்ள 3 அப்பர் சிங் தெருவில் ஷா பிறந்தார். [1][3] ஜார்ஜ் கார் ஷா (1814-1885) மற்றும் லூசிண்டா எலிசபெத் (பெஸ்ஸி) ஷா (1830-1913) ஆகியோரது மகனாகப் பிறந்தார். இவரது மூத்த உடன்பிறப்புகள் லூசிண்டா (லூசி) பிரான்சிஸ் (1853-1920) மற்றும் எலினோர் ஆக்னஸ் (1855-1876). ஷா குடும்பம் ஆங்கில-ஐரிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அயர்லாந்தில் ஆதிக்கம் செலுத்தும் புராட்டஸ்டன்ட் அசென்டென்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.[5] பெர்னார்ட் ஷா பிறந்த சமயத்தில் டப்லின், இசை வட்டாரத்தில் பரவலாக அறியப்பட்ட ஜார்ஜ் ஜான் லீயுடன் இணக்கமாக இருந்தார்.லீ தனது உயிரியல் தந்தையாக இருந்திருக்கலாம் என்று ஷா வாழ்நாள் முழுவதும் மனத்தாங்கல் கொண்டிருந்தார்.[6] ஆனால் ஷவியன் அறிஞர்களிடையே இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஒருமித்த கருத்து இல்லை. [7] [8] [9] [10] தனது தாய் தன்னிடம் கடுமையாக நடந்துகொண்டதில்லை எனவும் அவரது அலட்சியமும் தன்னிடத்தில் பாசம் காட்டததும் தன்னை அதிகமாக காயப்படுத்தியதாக நினைவு கூர்ந்தார்.[11] இவரது வீட்டிற்கு பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் அடிக்கடி வருகை புரிந்துள்ளனர்.[1] இலண்டனில்1876 ஆம் ஆண்டின் துவக்கத்தில், ஆக்னஸ் காச நோயால் இறந்தார் என்பதை ஷா தனது தாயிடமிருந்து அறிந்து கொண்டார். மார்ச் மாதம் ஆக்னசின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இங்கிலாந்து சென்றார். இருபத்தி ஒரு ஆண்டுகளாக இவர் இலண்டன் திரும்பவில்லை. [1] ஆரம்பகாலங்களில் ஷா லண்டனில் எழுத்தர் வேலை தேட மறுத்துவிட்டார். தெற்கு கென்சிங்டனில் உள்ள தனது வீட்டில் கட்டணமின்றி வாழ அவரது தாயார் அனுமதித்தார், ஆனால் வாழ்க்கை நடத்துவதற்கு இவருக்கு வருமானம் தேவைப்பட்டது. தனது இளமைக் காலத்தில் ஓவியர் ஆக வேண்டும் என நினைத்திருந்தார். பின்னர் அதனை மாற்றினார். அரசியல் விழிப்புணர்வுசெப்டம்பர் 5,1882இல் அரசியல் பொருளாதார நிபுணர் ஹென்றி ஜார்ஜ் உரையாற்றிய ஃபரிங்டன் நினைவு அவையில் நடந்த கூட்டத்தில் ஷா கலந்து கொண்டார். [12] பின்னர் ஷா ஜார்ஜின் முன்னேற்றமும் வறுமையும் என்ற நூலைப் படித்தார், அது பொருளாதாரம் பற்றிய ஆர்வத்தினை இவருக்கு ஏற்படுத்தியது. [13] இவர் சமூக ஜனநாயகக் கூட்டமைப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார்.கார்ல் மார்க்சின் படைப்புகளை அங்கே வாசிக்கத் துவங்கினார். 1883இன் பெரும்பகுதியினை மூலதனம் (நூல்) படிக்கச் செலவழித்தார்.சனநாயகக் கூட்டமைப்பின் நிறுவனரான ஹென்ரி ஹின்ட்மனின் செயல்பாடுகள் இவருக்கு திருப்தி அளிக்கவில்லை. அவரிடத்தில், எதேச்சதிகாரம், மோசமான மனநிலை மற்றும் தலைமைத்துவ குணங்கள் இல்லாததாக ஷா உணர்ந்தார். தொழிலாளர் வர்க்கத்தை ஒரு பயனுள்ள தீவிர இயக்கமாகப் பயன்படுத்துவதில் சனநாயக அமைப்பு சரிவர செயல்படவில்லை என்று கருதி தனது ஒத்த கருத்துடையவர்களுடன் இணைந்து செயல்பட விரும்பினார்.[13] ஃபேபியன் அமைப்பினால் வெளியிடப்பட்ட[15] ஒய் ஆர் தெ மெனி புவர் எனும் கட்டுரையினைப் படித்த பிறகு மே 16, 1884இல் அந்த அமைப்பின் அடுத்த கூட்டத்திற்குச் சென்றார்.[16] செப்டம்பரில் அந்த அமைப்பின் உறுப்பினரானார். [17] சனவரி,1885இல் அந்த அமைப்பின் நிர்வாகக் குழுவின் உறுப்பினரானார். மேலும், அந்த ஆண்டின் பிற்பகுதியில் அந்த அமைப்பானது, சிறந்த பேச்சாளரான அன்னி பெசண்ட் மற்றும் வெப் ஆகியோரை புதிதாகச் சேர்த்தது.[17] முதல் உலகப்போர்ஆகத்து 1914இல் முதல் உலகப் போர் துவங்கிய பிறகு ஷா, காமன் சென்ஸ் அபவுட் தெ வார் எனும் கட்டுரையில் போரிடும் இரு நாடுகளும் குற்றவாளிகள் தான் என்று குறிப்பிட்டார்.[6] இவரது இத்தகைய கருத்து தீவிர தேசபக்தி கொண்ட இவரது நண்பர்களிடத்தில் வெறுப்பினை ஏற்படுத்தியது. "ஒரு பொது நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டால் பலரும் வெளியேறும் அளவிற்கு இவர் மீது வெறுப்பு கொண்டிருந்தனர்" என்று எர்வின் குறிப்பிட்டார்.[18] இவரது கருத்துகள் இவரது நற்பெயருக்கு களங்கத்தினை ஏற்படுத்தினாலும், பிரித்தானிய அதிகாரிகள் இடையே இவரது பிரச்சாரத் திறன்கள் நற்பெயரைப் பெற்றுத் தந்தது. மேலும் 1917இன் ஆரம்பத்தில் ஃபீல்ட் மார்ஷல் ஹெய்க் அவர்களால் மேற்கு முன்னணி போர்க்களங்களுக்குச் செல்ல அழைக்கப்பட்டார். அங்கு கண்ட காட்சிகளை வைத்து இவர் எழுதிய 10,000 வார்த்தைகள் கொண்ட அறிக்கை ஒரு சிப்பாயின் வாழ்க்கையின் மனிதத்தினை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்ததாக பாராட்டப்பட்டார். இவரது மூன்று குறுநாடகங்கள் போரின்போது திரையிடப்பட்டன. 1915இல் எழுதிய தி இன்கா ஆஃப் பெருசலேம் எதிரி நாட்டை மட்டுமன்றி பிரித்தானிய இரானுவத்தினரையும் எள்ளல் செய்யும் வகையில் காட்சிப்படுத்தியதால் தணிக்கைப் பிரச்சினை எழுந்தது. 1916இல் இது பர்மிங்காம் ரெபர்ட்டரி அரங்கில் நிகழ்த்தப்பட்டது.[19] அயர்லாந்தில் வேலைக்கு ஆட்சேர்க்கும் நடைமுறையினை எள்ளல் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட ஓ பிளாகர்டி விசி ராயல் பறக்கும் படை தளத்தில் நிகழ்த்தப்பட்டது. அகஸ்டஸ் டஸ் ஹிஸ் பிட், 1917இல் ராயல் வளாகத்தில் நிகழ்த்தப்பட்டது.[20] சான்றுகள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia