தங்குதன் இருகுளோரைடு ஈராக்சைடு
தங்குதன் இருகுளோரைடு ஈராக்சைடு (Tungsten dichloride dioxide) என்பது WO2Cl2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட மஞ்சள் நிறத்திலுள்ள ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மற்ற தங்குதன் சேர்மங்களைத் தயாரிக்க இச்சேர்மம் ஒரு முன்னோடியாகப் பயன்படுத்தப்படுகிறது. தங்குதன் ஆலைடுகளைப் போலவே தங்குதன் ஆக்சி குளோரைடும் ஈரக்காற்றால் பாதிக்கப்படுகிறது, நீராற்பகுத்தல் வினைக்கும் உட்படுகிறது. தயாரிப்புதங்குதன் மூவாக்சைடு மற்றும் தங்குதன் அறுகுளோரைடு ஆகிய சேர்மங்கள் ஈதல் தொகுதி மறுபங்கீட்டு வினையினால் மூலம் தங்குதன் இருகுளோரைடு ஈராக்சைடாக மாறுகின்றன.
இரண்டு மண்டலக் குழாய் ஊது உலையைப் பயன்படுத்தி, இந்த திடப்பொருட்கள் மூடி முத்திரையிடப்பட்ட வெற்றிடக் குழாயில் 350 ° செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தப்படுகின்றன. பதங்கமாதல் முறையில், மஞ்சள்நிற வினைவிளைபொருள் வினைக்குழாயின் குளிர்ந்த பகுதியில் சேர்கிறது. இச்செயல்முறையில் ஏற்ற ஒடுக்கங்கள் ஏதும் நிகழ்வதில்லை.[1] மற்றொரு மாற்றுத் தயாரிப்பு முறை தங்குதனின் ஆக்சைடாகுமையை உயர்த்திக் காட்டுகிறது.:[2]
முன் வினையைப் போலவே இவ்வினையும் WOCl4 என்ற இடைநிலை உருவாக்கத்தின் மூலமாக நிகழ்கிறது. கட்டமைப்புதங்குதன் இருகுளோரைடு ஈராக்சைடானது, உருக்குலைந்த எண்முகத் தங்குதன் மையங்களால் ஆக்கப்பட்ட ஒரு பலபடியாகும். குறிப்பாக, பல் W-O பிணைப்புள்ளவற்றில், குறைந்த பிணைப்பு இடைவெளி கொண்ட இரண்டு W-O பிணைப்புகளால் அவற்றின் ஒற்றைப்படியானது அடையாளப்படுத்தப்படுகிறது. அதிலும் மிகமுக்கியமாக, தனி W-O பிணைப்புகளில்[3] இவ்விரு நீளமான பிணைப்பு இடைவெளிகள் காணப்படுகின்றன. தங்குதனின் பிற ஆக்சி ஆலைடுகள் மற்றும் தொடர்புடைய ஆக்சி அலைகள்WOCl4, WOCl3, WOCl2 உள்ளிட்ட எண்ணற்ற ஆக்சி ஆலைடுகளாக தங்குதன் உருவாகிறது. தொடர்புள்ள (WOBr4, WOBr3, WOBr2) புரோமைடுகளும் WO2I2 சேர்மம் என்றே அறியப்படுகின்றன[4] ![]() வினைகள்WO2Cl2 ஒரு இலூயிக் அமிலமாகும். WO2Cl2L2 வகையில் அமைந்த, கரையும் தன்மை கொண்ட கூட்டுப்பொருளாக உருவாகிறது. இங்குள்ள L ஆனது இருபிரிடின் மற்றும் இருமெத்தாக்சியீத்தேன் போன்ற வழங்கி ஈதல் தொகுதிகளாகும். பெரும்பாலும் பலபடியாக்க ஒடுக்கம் மூலமாக இத்தைகய அணைவுச் சேர்மங்களைத் தயாரிக்க முடிவதில்லை. ஆனால் WOCl4 சேர்மத்திலிருந்து அதன் தளப்பகுதியிலேயே தயாரிக்கப்படுகின்றன.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia