தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிடும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதிக்கு உழைத்திடும் பெரியோர்கள் போன்றவர்களில் சிலரைத் தேர்வு செய்து சான்றோர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலமாக சில விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுகளில் தமிழ்ச்செம்மல் விருது தவிர்த்த அனைத்து விருதுகளுக்கும் தமிழக அரசின் சார்பில் இந்திய ரூபாய் ஒரு இலட்சம் பரிசுத் தொகையாகவும், பொற்கிழி வழங்கி, தங்கப்பதக்கம் அணிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருவர் வீதம் 32 தமிழறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டுத் தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குத் தமிழக அரசின் சார்பில் இந்திய ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. வழங்கப்படும் விருதுகள்தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை திருவள்ளுவர் நாள் விருதுகள் மற்றும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நாள் விருதுகள் என்று இரு பிரிவுகளில் விருதுகளை வழங்கி வருகிறது. திருவள்ளுவர் நாள் விருதுகள்திருவள்ளுவர் நாள் விருதுகளாகக் கீழ்க்காணும் 7 விருதுகள் வழங்கப்படுகின்றன.[1]
சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நாள் விருதுகள்சித்திரத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளாகக் கீழ்க்காணும் 18 விருதுகள் வழங்கப்படுகின்றன.[2]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia