தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியம்

பனைமரத் தொழிலாளர் நல வாரியம் என்பது பனைத் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கான நல வாரிய அமைப்பு ஆகும். இது தமிழக அரசினால் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலார் நலவாரியங்களில் ஒன்று ஆகும்.

இதன் மூலம் பனை மரத் தொழிலாளர்களான அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஓர் அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு, தேவையான நலத் திட்ட உதவிகள் வழங்கி, அவர்களின் சமூக நலப்பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

இந்த நலவாரியம் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

பனைத் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவராக திரு. எர்ணாவூர்.A.நாராயணன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

உறுப்பினராகும் முறை

பனைத் தொழிலாளர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நல அலுவலரைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். உறுப்பினர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும்.

பயன்கள்

தொழிற் பயிற்சி

  • உறுப்பினர்களுக்கு பனை மர கைவினைப் பொருட்களுக்கானத் தொழிற் பயிற்சி
  • பனை மர உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்கானத் தொழிற் பயிற்சி

நலத்திட்ட உதவிகள்

இந்த நலவாரிய உறுப்பினர்களுக்கு தமிழக அரசால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

  • உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு பள்ளிப்படிப்பு முதல் கல்லூரி வரையிலான கல்வி உதவித் தொகை
  • உறுப்பினர்களுக்கான திருமண உதவித்தொகை
  • மகப்பேறு கால உதவித் தொகைகள்
  • உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம்
  • கலைஞர் காப்பீட்டுத் திட்டம்
  • விபத்து நிவரணத் தொகை
  • உறுப்பினர்கள் பணிக் காலத்தில் இறந்தால், குடும்பத்தினர்க்கு காப்பீட்டுத் தொகை

கோரிக்கைகள்

  • பதநீர் கொள்முதல் விலையை அதிகரிப்பது மற்றும் பரவலாக்குவது.
  • பொதுமக்கள் பதநீரை அதிகளவு பயன்படுத்த அரசாங்கம் ஊக்கப்படுத்துவது.
  • பொதுமக்கள் சர்க்கரையின் பயன்பாட்டைக் குறைத்து விலைமலிவான மற்றும் ஆரோக்கியமான பனைவெல்லத்தின் பயன்பாட்டை அதிகரிப்பது.
  • பனைமரத்தில் ஏற எளிய, எடை குறைந்த மற்றும் விலை மலிவான இயந்திரத்தை உருவாக்குவது.

கள் இறக்க அனுமதி

கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை தமிழக அரசு தொடர்ந்து பரிசீலித்து வருகிறது. தமிழக அரசே கள் அல்லது புளிக்காத கள்ளை கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

சாதகங்கள்

  • ஏழைப் பனைமர விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டித் தரும்.
  • மற்ற போதை தரும் பொருட்களைவிட கள் ஒப்பீட்டளவில் உடல்நலத்திற்கு உகந்தது.

பாதகங்கள்

  • குடி உடலுக்கு, உயிருக்குக் கேடு
  • குடி நாட்டுக்கு, வீட்டுக்குக் கேடு
  • கள் எளிதாக விலை மலிவாக ஏழை உழைப்பாளர்களின் வாழ்விடங்களுக்கு அருகிலேயே கிடைப்பதனால், போதைக்கு அடிமையாகி, உழைப்பு பாதிக்கப்பட்டு, குடும்ப வருமானம் குறைந்து, வறுமைக்குத் தள்ளப்படும் அபாயம்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya