தி. வேல்முருகன்
தி. வேல்முருகன் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் தமிழக சட்டப்பேரவை உறுப்பினருமாவார். பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராகப் பண்ருட்டித் தொகுதியிலிருந்து 2001இலும் 2006இலும் மாநில சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 2011 தேர்தலில், புதியதாக உருவாக்கப்பட்ட நெய்வேலி சட்டமன்றத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு அதிமுகவின் எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியனிடம் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் இணைப் பொதுச்செயலாளராக விளங்கிய வேல்முருகன் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்காக 2011 நவம்பர் 1 அன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.[3][4] பின்னர் 2012 தை முதல் நாள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி எனும் புதிய கட்சியைத் தொடங்கினார். 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பண்ருட்டித் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[5] தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia