புலியூர்
புலியூர் (ஆங்கிலம்:Puliyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், கரூர் வட்டத்தில் இருக்கும்[3] ஒரு பேரூராட்சி ஆகும். புலியூர் பேரூராட்சியில் அமராவதி ஆறு பாய்கிறது. அமைவிடம்கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்த புலியூர் பேரூராட்சி, கரூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பேரூராட்சியின் அமைப்பு9.68 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 73 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிருஷ்ணராயபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,416 வீடுகளும், 12,720 மக்கள்தொகையும் கொண்டது.[5][6] புவியியல்இவ்வூரின் அமைவிடம் 10°38′N 78°50′E / 10.63°N 78.83°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 106 மீட்டர் (347 அடி) உயரத்தில் இருக்கின்றது. வெளி இணைப்புகள்ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia