தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்
தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலிள் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப்பகுதியாகும். இந்தத் தீவானது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மாலுமி ஜேம்ஸ் குக் என்பவரால் 1770 இல் கண்டறியப்பட்டது. இது தெற்கு யோர்சியா எனப்படும் சுமார் 106.25 மைல் (170 கி.மீ.) நீளமும், 18 மைல் (29 கி.மீ.) அகலமும் கொண்ட ஒரு பெரிய தீவையும் தெற்கு சண்ட்விச் தீவுகள் எனப்படும் அளவில் சிறிய தீவுக் கூட்டங்களையும் கொண்டது. இவ்வாட்சிப் பகுதியில் பாரம்பரியக் குடிகள் யாரும் கிடையாது, பிரித்தானிய அரச அலுவலர், பதில் தாபல் அதிகாரி, வேதியலாளர்கள், மற்றும் பிரித்தானிய அண்டார்டிக்கா ஆய்வு நிறுவனத்தின் துணை சேவையாளர்கள் மாத்திரமே இங்கு வசிக்கின்றனர்.[1][2][3] ஐக்கிய இராச்சியம் தெற்கு யோர்சியாவுக்கு 1775 முதல் முடியுரிமையக் கொண்டுள்ளதோடு, தெற்கு சண்ட்விச் தீவுகள் 1985 ஆம் ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்டதாகும். 1985 இற்கு முன்னர் தெற்கு சண்ட்விச் தீவுகள் பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப்பகுதியான போக்லாந்து தீவுகளின் சார்புப் பகுதியாக ஆட்சி செய்யப்பட்டு வந்தது. ஆர்ஜென்டீனா 1927 ஆம் ஆண்டு தெற்கு யோர்சியாவுக்கும் 1938 ஆம் ஆண்டு தெற்கு சண்ட்விச் தீவுகளுக்கும் உரிமை கோரியது. 1976 முதல் 1982 இல் பிரித்தானிய கடற்படையால் மூடப்படும் வரை ஆர்ஜென்டீனா தெற்கு சண்ட்விச் தீவுகளில் ஒரு கடற்படைத்தளத்தையும் பேணி வந்த்தது. ஆர்ஜென்டீனாவின் தெற்கு யோர்சியா மீதான உரிமைக் கோரல் 1982 ஆம் ஆண்டு போக்லாந்துப் போருக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia