நாகப்பட்டினம் சந்திப்பு தொடருந்து நிலையம்
நாகப்பட்டினம் சந்திப்பு தொடருந்து நிலையம் (Nagapattinam Junction railway station, நிலையக் குறியீடு:NGT) இந்தியாவின், தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் நகரிலுள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். அதிகார எல்லைஇந்நிலையம் தெற்கு இரயில்வே மண்டலத்தின், திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்குகிறது.[2] அமைவிடம்நாகப்பட்டினம் சந்திப்பு தொடருந்து நிலையமானது, டாட்டா நகரின், எருத்துக்கார வீதியில் அமைந்துள்ளது. இதற்கு அருகிலேயே நாகப்பட்டினம் பேருந்து நிலையமும் அமைந்துள்ளது. தொடருந்து நிலையத்திலிருந்து 110 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி விமான நிலையம் அருகிலுள்ள விமான நிலையமாகும். வழித்தடங்கள்திருச்சிராப்பள்ளி சந்திப்பு , தஞ்சாவூர் சந்திப்பு, திருவாரூர் சந்திப்பு, இராமேசுவரம் மற்றும் பல இடங்களுடன் சென்னையை இணைக்கும் முக்கிய பாதையாக இந்நிலையம் உள்ளது. மேலும், வடக்கே நாகூர் வழியாகக் காரைக்காலுக்குச் செல்லும் ஒரு கூடுதல் இணைப்புப் பாதையையும் இந்நிலையம் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia