நிரபராதி (1984 திரைப்படம்)
நிரபராதி (Niraparaadhi) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி குற்றப் படம் ஆகும். இத்திரைப்படத்தினை கே. விஜயன் இயக்கினார். சுரேஷ் ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் கே.பாலாஜி தயாரித்தார். இப்படத்தில் மாதவி மற்றும் சில்க் ஸ்மிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தார்.[1][2] இந்தப் படம் பீ ஆப்ரூ என்ற இந்தி திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[3] நடிகர்கள்
கதைகளம்நிழல்கள் ரவி ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். இருவரும் ஒரு பங்களாவில் வாழ வருகிறார்கள். வி.கே. ராமசாமி, கே. விஜயன் போன்றோர் அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்துகொள்கின்றனர். அதன்பிறகே நிழல்கள் ரவி தொடர்ந்து காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி அவர்களிடம் விற்றுவிடுவது தெரிகிறது. ஒலிப்பதிவுஇத்திரைப்படத்திற்கு சங்கர்-கணேஷ் இசையமைத்தனர்.[4]
வெளியீடுபடம் வெளியிடுவதற்கு முன்னர் தணிக்கை சிக்கல்களை எதிர்கொண்டது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia