நைட்ரோவாற் பகுப்பு

நைட்ரோவாற் பகுப்பு (Nitrolysis) என்பது ஒரு வேதிச் சேர்மத்தில் நைட்ரோ குழுவின் (NO2) நிறுவலும் தொடர்ந்து அதனுடன் இணைந்த வேதிப் பிணைப்பில் பிளவை ஏற்படுத்தும் ஒரு வேதி வினையாகும். நைட்ரிக் அமிலமும் அசிட்டைல் நைட்ரேட்டும் இந்த மாற்றத்தை செயல்படுத்துவதற்கான பொதுவான வினைக்காரணிகளாகும். ஓர் எக்சமீனை நைட்ரமைடாக மாற்றும் வினையே, வணிக ரீதியாக முக்கியமான நைட்ரோவாற் பகுப்பு வினையாகும். பரவலாக வெடிபொருளாகப் பயன்படுத்தப்படும் ஆய்வுத் துறையில் வெடிபொருள் தயாரிக்க எக்சமீனை மூ-நைட்ரமைடாக (RDX, O2NNCH2)3) மாற்றும் வினை பயன்படுகிறது.[1]

மேற்கோள்கள்

  1. Boileau, Jacques; Fauquignon, Claude; Hueber, Bernard; Meyer, Hans H. (2009). "Explosives". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. p. 641. doi:10.1002/14356007.a10_143.pub2.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya