பச்சையப்பன் கல்லூரி![]() பச்சையப்பன் கல்லூரி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள ஒரு மிகத் தொன்மையான கல்லூரி ஆகும். இக்கல்லூரி பச்சையப்ப முதலியார் இறப்பிற்குப் பிறகு, அவரது உயிலில் வரைந்திருந்தபடி, அறச்செயல்களுக்காக அவர் ஒதுக்கியிருந்த தொகையினைக் கொண்டு பிராட்வேயிலிருந்த பச்சையப்பன் நடுவ நிறுவனத்தால் (Pachaiyappa's Central Institution) சனவரி 1,1842 அன்று நிறுவப்பட்டது. இது தென்னிந்தியாவில் பிரித்தானியரின் நிதியுதவியின்றி நிறுவப்பட்ட முதல் சைவ மத நிலையமாக விளங்கியது.1889-ஆம் ஆண்டு கல்லூரியாகத் தகுதி பெற்றது. 1947-ஆம் ஆண்டுவரை இந்திய மாணவர்களை மட்டுமே சேர்த்து வந்தது. இன்று அனைத்து மாநில, மாவட்ட மாணவர்களும் இந்தக் கல்லூரியில் படித்து வருகிறார்கள். வரலாறுபச்சையப்ப முதலியார் காஞ்சிபுரம் மாவட்டம், பெரியபாளையத்தில், 1754-ஆம் ஆண்டில் பிறந்தார். இவரின் தந்தை காஞ்சிபுரம் விசுவநாத முதலியார் மற்றும் தாய் பூச்சி அம்மாள் ஆவார். இவர் அகமுடைய வெள்ளாளர் (துளுவ வெள்ளாளர் முதலியார்) சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[2][3] பச்சையப்பரின் பிறப்பிற்குச் சில தினங்களுக்கு முன்பே இவரின் தந்தை காலமாகிவிட்டார். பின்பு இவரின் தாயார் ஐந்தே வயது நிரம்பிய பச்சையப்பரையும் அவரின் இரு சகோதரிகளையும் அழைத்துக்கொண்டு, சென்னையை அடைந்து, சாமி மேஸ்திரி தெருவில் வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் ஆங்கில வணிகர்களுக்கு மொழி பெயர்ப்பாளராய் விளங்கிய நாராயணப் பிள்ளை என்ற செல்வரிடம் அடைக்கலம் புகுந்தார். நாராயணப்பிள்ளை இவரை உடன் பிறந்தாளைப் போல் போற்றி, பச்சையப்பருக்குக் கணக்கு, கடிதத் தொடர்பு போன்றவற்றில் பயிற்சியும் ஆங்கில அறிவைப் பெறவும் உதவினார். பச்சையப்பர் தமது தன்னம்பிக்கை கொண்டே 22 வயதில் பெரும் நிதியாளராகவும் வணிகமேதையாகவும் திகழ்ந்தார். இவர் தமது சொத்துகள் அனைத்தையும் இறைவனுக்கும், மனிதத்திற்கும் அர்ப்பணித்தார். இவர் 1794-ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று கும்பகோணத்தில் இருந்தபோது தனது மரணம் குறித்து ஓர் முன்னறிவிப்பைப் பெற்று தமது உயிலை (இறுதிமுறி) எழுதினார். இவரது உயில் வாசகம்:
இவரது உயிலைப் பராமரித்தவர்கள் சரியான முறையில் அதனைச் செலவழிக்காததால் உயர்நீதிமன்றம் தானே அறக்கட்டளை நிதியான மூன்றரை இலக்கம் ரூபாய் பெறுமான சொத்துகளை அகப்படுத்திக் கொண்ட பின்னர் ஏழரை இலக்கமாக உயர்ந்தது. மூன்றரை இலக்கத்தை கோவில் திருப்பணிகளுக்குக் கொடுத்துவிட்டு மீதமுள்ளதில் இவர் பெயரில் கல்விச்சேவைகள் தொடங்கப் பயன்படுத்தியது.[1] கல்லூரி முதல்வர்கள்
கல்வித்திட்டங்கள்பட்டப் படிப்புகள்
பட்டமேற்படிப்புகள்
ஆய்வுத் திட்டங்கள்
பரவலாக அறியப்பட்ட முன்னாள் மாணவர்கள்இந்தத் தொன்மையான கல்லூரியிலிருந்து பல முன்னாள் மாணவர்கள் அறிஞர்களாகவும், அரசியல்வாதிகளாகவும் பொது சேவை அதிகாரிகளாகவும், வணிகப்பெருமக்களாகவும் புகழ் பெற்றுள்ளனர். முன்னாள் மாணவர்களின் முழுமையான பட்டியல் அவர்களது தளத்தில் உள்ளது[5]. இவர்களில் சிலர்:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia