பஞ்சாப் விளையாட்டு பல்கலைக்கழகம்
பஞ்சாப் விளையாட்டு பல்கலைக்கழகம் (Punjab Sports University), என்பது அதிகாரப்பூர்வமாக மகாராஜா பூபிந்தர் சிங் பஞ்சாப் விளையாட்டு பல்கலைக்கழகம் என அழைக்கப்படுகிறது. இந்த இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலாவில் அமைந்துள்ளது. இந்த மாநில பல்கலைக்கழகம் உண்டு உறைவிட வகையினைச் சார்ந்தது.[1] வரலாறுபஞ்சாபில் விளையாட்டு பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்கிட சூன் 2017-ல் பஞ்சாப் அரசு முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து சூலை 2019-ல் இப்பல்கலைக்கழகத்திற்கு மகாராஜா பூபிந்தர் சிங்கின் பெயரிட முடிவு செய்யப்பட்டது. பின்னர் இப்பல்கலைக்கழகம் ஆகத்து 2019-ல் மகாராஜா பூபிந்தர் சிங் பஞ்சாப் விளையாட்டு பல்கலைக்கழக சட்டம், 2019[2] மூலம் நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து புது தில்லி, பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகாரம் வழங்கியது. இப்பல்கலைக்கழக முதல் துணைவேந்தராக ஜக்பீர் சிங் சீமா நியமிக்கப்பட்டார். வளாகம்பஞ்சாப் விளையாட்டு பல்கலைக்கழகம் பேராசிரியர் குர்சேவாக் சிங் அரசு உடற்கல்வி கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாகத் தொடங்கப்பட்டது. [3] இப்பல்கலைக்கழகத்திற்கு 97 ஏக்கர்கள் (39 ha) நிலம் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள சிதோவால் கிராமத்தில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அருகில் ஒதுக்கப்பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia