சிறீ சிறீ அனிருத்ததேவா விளையாட்டு பல்கலைக்கழகம்
சிறீ சிறீ அனிருத்ததேவா விளையாட்டு பல்கலைக்கழகம் (Sri Sri Aniruddhadeva Sports University), அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள சாபுவாவில் அமைந்துள்ள அசாம் மாநிலப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் செப்டம்பர் 26, 2018 அன்று அசாம் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட அசாம் சிறீ சிறீ அனிருத்ததேவா விளையாட்டு பல்கலைக்கழக சட்டம், 2018 மூலம் நிறுவப்பட்டது. இச்சட்டத்திற்குத் திசம்பர் 10, 2018 அன்று அசாம் ஆளுநர் ஒப்புதலை வழங்கினார்.[1] சூலை 2020 10 அன்று செயபிரகாசு வர்மா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பொறுப்பேற்றார்.[2] இப்பல்கலைக்கழகம் தற்போது திப்ருகர் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து செயல்படுகிறது. கல்விஇப்பல்கலைக்கழகம் 2020-21 கல்வியாண்டிலிருந்து உடற்கல்வியில் இளநிலை நான்கு ஆண்டு பாடத்தினை வழங்குகிறது. ஒன்று, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கல்வி முடிந்த பிறகு வெளியேறும் வசதிகளுடன் இப்பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி முறையே சான்றிதழ், பட்டயம் அல்லது இளங்கலை பட்டம் பெறலாம்.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia