இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.
பன்றிக்களை[சான்று தேவை] (Amaranthus), திரளாக அமரந்த்(amaranth) எனப்படுகிறது.[1] பன்றிக்களை என்பது உலகெலாம் பரவிய ஆண்டுத் தாவரமாகவோ பருவத் தாவரமாகவோ அமைகிறது. சில பன்றிக்களை இனங்கள் கீரையாகவோ போலிக் கூலங்களாகவோ அழகு தாவரங்களாகவோ பயிரிடப்படுகின்றன. பெரும்பாலான பன்றிக்களை இனங்கள் கோடைப் பருவக் களைகளாக அமைகின்றன.[2] கோடையில் அல்லது இலையுதிர் காலத்தில் பூனை மென்மயிர் போன்ற அடர் இதழ்கள் அமைந்த மஞ்சரிகள் பூக்கின்றன.[3] பன்றிக்களை இனங்களின் பூக்களும் இலைகளும் தண்டும் கடல்நீலம் முதல் செஞ்சிவப்பு வரையிலான பல மிளிரும் வேறுபடுகின்றன, இவை கிடைநிலையில் 3 அடி முதல் வண்ணங்களில் 8 அடிவரை வளர்கின்றன. இதன் உருளையான நாரிழை கொண்ட சதைப்பற்றுள்ள தண்டு போலானது (உள்ளீடற்றது). காடிகள் (வரிப்பள்ளங்கள்) அமைந்தது. முதிர்ந்ததும் அதில் சிற்றிலைகள் அமைகின்றன.[4]
Amaranthus tricolor
அமரந்தசு பேரினத்தில் 75 இனங்கள் அமைகின்றன. இவற்றில் பத்து இனங்கள் இருபாலின வாகும்.ஐவை பத்தும் வட அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டன. எஞ்சிய 65 இனங்கள் ஒருபாலின வாகும். இவை தாவரவகை இனப்பெருக்கம் உடையனவாகும். இவைனானைத்துக் கண்டங்களிலும் வெப்பத் தாழ்நிலங்களில் இருந்து இமயமலைக் குளிர்வரை எங்கும் பரவி வளர்கின்றன.[5] இந்தப் பேரினத் தாவரங்கள் இதற்கு மிகவும் நெருங்கிய செலோசியா பேரினத்துடன் பல பான்மைகளையும் பயன்பாடுகளையும் பகிர்கின்றன.
பன்றிக்களைப் பேரினத்தில் உள்ள இனங்கள் ஆண்டு அல்லது பருவச் செடிகளாக அமைகின்றன.[4] பூக்கள் மூன்று முதல் ஐந்து புறவிதழ்களும் சூலகங்களும் கொண்டுள்ளன. ஆனால், இதன் குடும்பத்தில் 7 பொலன்மணி கட்டமைப்பு பெரும்பாலும் பரவலாக அமைகிறது.[4] இப்பேரினத்தின் இனங்களில் குழல்கற்றைகள் ஒருமைய வலயங்களைப் பெற்றுள்ளதால் கரிம 4 ஒளிச்சேர்கை வழித்தடக் கரிம நிலைப்படுத்தலைக் கொண்டுள்ளன.[4] இலைகள் முட்டை அல்லது நீள்வட்ட வடிவில் 6.5 செமீ முதல்15 செமீ நீளத்தில் ஈரிணை இலை வரிசையிலோ ஒன்றுவிட்ட இலை வரிசையிலோ அமைகின்றன. என்றாலும் இலைகள் விளிம்பு முழுவதும் சீராகவுள்ள எளிய இலைகளாகும்.[4]
பன்றிக்களை மூல முதன்மை வேருடன் ஆழத்தில் பல நாரிழைத் தூவிகளால் ஆகிய துணை வேர்த்தொகுதியைக் கொண்டுள்ளது.[6] மஞ்சரிகள் பெரிய கதிர் வடிவத்தில் அமைகின்றன; கதிரின் முனையில் இருந்து அச்சுக்குச் செல்லும்போது வண்ணத்திலும் பாலின இயல்பிலும் மாறுபவை. மஞ்சரியின் குஞ்சம் நிமிர்ந்தோ வளைந்தோ ஒவ்வொரு இனத்துக்கும் அகலத்திலும் நீளத்திலும் வேறுபடுகின்றன. பூக்கள் சிறு கூரான புல்லிகளுடனும் முள்வகைப் பூவடிச் சிற்றிலைகளுடனும் ஆரச் சீரொருமை வாய்ந்தனவாக உள்ளன; இவை ஒருபாலினம் அல்லது இருபாலினம் கொண்டமையலாம்].[6] இப்பேரினத்தின் இனங்கள் ஒருபாலினம் உள்ளதாகவோ ( A. hybridus, L. போல) அல்லது இருபாலினம் உள்ளதாகவோ ( A. arenicola, L. போல) அமையலாம்.[6] பழங்கள் குளிகை வடிவத்தில் அமைகின்றன. இவை unilocular pixdio எனப்படுகின்றன. முதிர்ந்ததும் இவை வெடிக்கின்றன.[6] வெடிக்கும்போது இவை விதைகள் அமைந்த கலன்களை சிதறவிடுகின்றன.[6] விதைக்கலனில் உள்ள விதைகள் 1-1.5 மிமீ விட்டமுள்ள வட்ட வடிவானவை. மிளிரும் வழுவழுப்பான விதையுறை உள்ளவை.[6] பூக்குஞ்சங்கள் நட்டு 200 நாட்களில் அறுவடை செய்யப்படுகின்றன. ஒவ்வொரு குஞ்சத்திலும் ஒரு கிராமுக்கு 2000 முதல் 3000 விதைகள் அமைகின்றன.[7]
வகைபாட்டியல்
பன்றிக்களைகள் பேரின மட்டத்திலும் சில இனங்களிலும் கூட, பல்வகைமைப் புறவடிவப் பான்மைகளைக் கொண்டுள்ளன. இது அமரந்தேசியே குடும்படுத்தையும் அக்குடும்பம் காரோபில்லேல்சு தாவரப் பகுப்பையும் சேர்ந்தது.[4] அமரந்தேசியே குடும்பம் தனித்தன்மையானது என்றாலும், ஏழு கண்டங்களிலும் பரவியுள்ள அமரந்த் (பன்றிக்க்களைப்) பேரினத்தின் 75 இனங்கள் தமக்குள்ளே சில தனித்த பான்மைகளைக் கொண்டுள்ளன.[8] இது இப்பேரினத்தின் வகைபாட்டியலைச் சிக்கலானதாக ஆக்குகிறது. வகைபாட்டு அறிஞர்கள் இப்பேரினம் வகைப்படுத்த அரியது எனவும் கலப்பினமான த்ன்மை கொண்டது எனவும் கருதுகின்றனர்.[9]
இனங்கள்
பன்றிக்களைப் பேரினத்தில் பின்வரும் இனங்கள் அமைகின்றன:[10][11]
↑ 4.04.14.24.34.44.5Schmid, Rudolf; Judd, Walter S.; Campbell, Christopher S.; Kellogg, Elizabeth A.; Stevens, Peter F.; Donoghue, Michael J.; Judd, Walter S.; Nickrent, Daniel L.; Robertson, Kenneth R.; Abbott, J. Richard; Campbell, Christopher S.; Carlsward, Barbara S.; Donoghue, Michael J.; Kellogg, Elizabeth A. (1 October 2007). Plant Systematics: A Phylogenetic Approach. Vol. 56. Wiley. p. 1316. doi:10.2307/25065934. ISSN0040-0262. {{cite book}}: |journal= ignored (help)
↑Steckel, Lawrence E. (April 2007). "The Dioecious Amaranthus spp.: Here to Stay" (in en). Weed Technology21 (2): 567–570. doi:10.1614/WT-06-045.1.
↑ 6.06.16.26.36.46.5Arreguez, Guillermo A.; Martínez, Jorge G.; Ponessa, Graciela (September 2013). "Amaranthus hybridus L. ssp. hybridus in an archaeological site from the initial mid-Holocene in the Southern Argentinian Puna". Quaternary International307: 81–85. doi:10.1016/j.quaint.2013.02.035.
↑Stetter, Markus G.; Schmid, Karl J (2016-11-03). Analysis of phylogenetic relationships and genome size evolution of the Amaranthus genus using GBS indicates the ancestors of an ancient crop. doi:10.1101/085472.
↑Costea, Mihai; DeMason, Darleen A. (2001). "Stem Morphology and Anatomy in Amaranthus L. (Amaranthaceae), Taxonomic Significance". Journal of the Torrey Botanical Society128 (3): 254. doi:10.2307/3088717. பன்னாட்டுத் தர தொடர் எண்:1095-5674.
↑Kumar, Thaliyangal Rajesh; Vishnu, Walsan Kalarikkal; Kumar, Venugopalan Nair Saradamma Anil; Arya, Sindu (2019-05-13). "Amaranthus saradhiana (Amaranthaceae)—a new species from southern Western Ghats of Kerala, India" (in en). Phytotaxa403 (3): 230–238. doi:10.11646/phytotaxa.403.3.7. பன்னாட்டுத் தர தொடர் எண்:1179-3163.