பம்பலப்பிட்டி
பம்பலப்பிட்டி (Bambalapitiya) இலங்கையின் தலைநகர் கொழும்பின் ஒரு நகர்ப் பகுதியாகும். கொழும்பு 4 என்ற குறியீட்டுடன் காலி வீதியில் கிட்டத்தட்ட 1.5 கிமீகள் தூரம் இது பரந்துள்ளது. இதன் மேற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலும் தெற்கே வெள்ளவத்தை, வடக்கே கொள்ளுப்பிட்டி ஆகியவையும் அமைந்துள்ளன. இங்கு தமிழர்கள் செறிந்து வாழ்கிறார்கள். இங்கு வழிபாட்டுத் தலங்களாக பம்பலப்பிட்டி கதிரேசன் கோயில், பம்பலப்பிட்டி சம்மாங்கோடு மாணிக்கவிநாயகர் கோயில், பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோயில் ஆகியவை அமைந்துள்ளன. தமிழ்ப் பாடசாலையாக பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, பம்பலப்பிட்டி இராமநாதன் மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டி புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவை அமைந்துள்ளன. இது தவிரப் பல சிங்களப் பாடசாலைகளும் ஆங்கில மொழியூடாகக் கற்பிக்கப்படும் சர்வதேசப் பாடசாலைகளும் அமைந்துள்ளது. உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia