பயனர்:பா.ஜம்புலிங்கம்பா. ஜம்புலிங்கம் (B.Jambulingam, ஏப்ரல் 2, 1959) தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச் சுருக்கெழுத்தராக ஆகஸ்ட் 16, 1982இல் பணியில் சேர்ந்த இவர் ஏப்ரல் 30, 2017இல் உதவிப்பதிவாளராகப் பணி நிறைவு பெற்றார்.
கல்வி
ஆய்வு, எழுத்துப்பணிகள்நூல்கள், கட்டுரைகள்வாழ்வில் வெற்றி (சிறுகதைத்தொகுப்பு, பிட்டி விஜயகுமார், சென்னை, 2001) [1], Tantric Tales of Birbal, November 2002 [2], Judgement Stories of Mariyathai Raman, November 2002[3], Jesting Tales of Tenali Raman, October 2005[4], Nomadic Tales from Greek, May 2007 [5] (மொழிபெயர்ப்புகள், New Century Book House, Chennai), படியாக்கம் (தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், சென்னை, டிசம்பர் 2004)[6], தஞ்சையில் சமணம் (கோ. தில்லை கோவிந்தராஜன், மணி. மாறன் ஆகியோருடன் இணைந்து, ஏடகம், தஞ்சாவூர், 2018) [7], விக்கிப்பீடியா 1000: பதிவு அனுபவங்கள் (மின்னூல், 2020), சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, 2022) ஆகிய நூல்கள். தமிழ்க்கலை, தமிழ்ப் பொழில், அறிக அறிவியல், Tamil Civilization, முக்குடை, தினமணி, இந்து தமிழ் திசை, புதிய தலைமுறை உள்ளிட்ட ஆய்விதழ்கள் மற்றும் நாளிதழ்களில் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள். பாடங்கள்தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்காக (முந்தைய தமிழ் இணையப் பல்கலைக்கழகம்) ஆசிரியர் என்ற நிலையில் மேற்பட்டயம் (Higher Diploma) வகுப்பிற்காக இலக்கிய வரலாறு 11ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரைக்கான பாடங்கள்.[8] திட்டங்கள்புதுதில்லி நேரு டிரஸ்ட் ஆதரவில் தனியாக Buddhism in Cola country, 2002 [9] Saptastana Temples (Saptastana Temples of Tiruvaiyaru, Thanjavur District), 2009 [10], மேற்பார்வவையாளராக G.Thillai Govindarajan, Jainism in Thanjavur District, Tamil Nadu, May 2010 மற்றும் Ayyampet N.Selvaraj, Study on the Saptastanam (Seven Sacred Places) of Chakkarappalli in Thanjavur District,Tamil Nadu, May 2011 [11] ஆகிய திட்டங்கள். சிலைகள் கண்டெடுப்புகள ஆய்வின்போது தமிழகத்தில் உள்ளிக்கோட்டை [12], கண்டிரமாணிக்கம்[13], கிராந்தி [14], குத்தாலம், குழுமூர் [15], கோபிநாதப்பெருமாள்கோயில் [16], சந்தைத்தோப்பு, சீதக்கமங்கலம் [17], திருச்சி [18], திருநாட்டியத்தான்குடி [19], பழையாறை [20] , பிள்ளைபாளையம் [21], புதூர் [22], மங்கலம் [23], மணலூர், முழையூர், வளையமாபுரம் [24], அய்யம்பேட்டை [25], சுந்தரபாண்டியன்பட்டனம் [26], ராசேந்திரப்பட்டினம் [27] ஆகிய இடங்களில் 21 புத்தர் சிலைகளும் [28] அடஞ்சூர், ஆலங்குடிப்பட்டி, கவிநாடு [29], காரியாங்குடி, சுரைக்குடிப்பட்டி, செங்கங்காடு, செருமாக்கநல்லூர் [30], தஞ்சாவூர், தோலி, நாட்டாணி[31], பஞ்சநதிக்குளம் [32], பெருமத்தூர், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் 13 சமண தீர்த்தங்கரர் சிலைகள் தனியாகவும், பிற ஆய்வாளர்களோடும் இணைந்து கண்டெடுப்பு. பேட்டிகள்“புத்தரைத் தேடி....“ (தினமணி கதிர், 6.1.2008), "Buddha spotting in Chola country fills his weekends" (Times of India, 29.10.2012)[33], “தமிழர் வழிபாடு: முனீஸ்வர புத்தர்“ (வாராந்தரி ராணி, 3.5.2015), "Tracing footprints of Buddhism in Chola country" (The New Indian Express, 15.5.2015) [34], "Writer of 250 articles in Tamil Wikipedia" (The New Indian Express, 13.11.2015) [35], "Even today, Mahamaham has significance for the people" Only place where festival is celebrated in a temple tank (Times of India, Trichy Edition, 23 January 2016), “பௌத்தவியலாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம்“ ( முகம், முகப்போவியம் 412, மலர் 38, இதழ் 10, சனவரி 2021) ஆகிய பேட்டிகள். விருதுகள்சித்தாந்த ரத்னம் (திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை, 1997), அருள்நெறி ஆசான் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், தஞ்சாவூர், 1998), பாரதி பணிச்செல்வர் (அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், சென்னை 2001), முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் (கணினி தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை, வலைப்பதிவர் திருவிழா 2015), விக்கிக்கோப்பை வெற்றியாளர் மூன்றாமிடம் (2017), வேங்கைத் திட்டம் 2.0 மூன்றாமிடம் (2020), பௌத்த மரபு ஆய்வாளர், அருமொழி விருது (சோழர் வரலாற்று ஆய்வு சங்கம், 2021), நிகரிலி சோழன் விருது (சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, 2022), தகைசால் தமிழர் (தமிழ்நாடு புலவர் பேரவை, 2023), மும்முடிச்சோழன் (2023), ஆவணக்குரிசில் (தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம், 2024)ஆகிய விருதுகள். என் பங்களிப்புகள்
மின்னஞ்சல்drbjambulingam@gmail.com This User's page in English wikipedia மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia