பயனர் பேச்சு:TNSE JOHN VLRவாருங்கள்!வாருங்கள், TNSE JOHN VLR, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்! உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள். தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்! நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும். பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
-- Chandravathanaa (பேச்சு) 15:59, 20 ஏப்ரல் 2017 (UTC) கட்டுரைத் தலைப்புவணக்கம். தாங்கள் பல புதிய கட்டுரைகளை உருவாக்கி வருவது கண்டு மகிழ்ச்சி. தலைப்பின் முதல் எழுத்துகளுக்கு அடுத்து ஒரு புள்ளியும் இடைவெளி விட வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, ஏ. எம். அமீத் இப்ராஹிம் என்று எழுத வேண்டும். மேலும் விவரங்களுக்கு விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு பாருங்கள்.--இரவி (பேச்சு) 17:12, 22 சூன் 2017 (UTC) சரிங்க ஐயா. திருத்தி கொள்கிறேன். ஆலோசைனைக்கு நன்றி. சம்பி காத் என்ற குறுங்கட்டுரைக்கு வரைபடத்தை இணைக்க இயலவில்லை. உதவவும் நன்றி
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி திரு இரவி அவர்களே..
விக்கியாக்கம்வணக்கம். தாங்கள் ஆறுகள் தொடர்பாக எழுதி வருவது மகிழ்ச்சி. ஒரு முறை கட்டுரையைப் பதிப்பித்த பின் அதனை எப்படி விக்கியாக்கம் செய்வது, உரை திருத்துவது என்பதற்கு எடுத்துக்காட்டாக இங்குள்ள மாற்றங்களைக் காணுங்கள். இவ்வாறான தொகுப்புகளைக் கவனித்து விக்கிப் பங்களிப்புகளில் இன்னும் நீங்கள் அடுத்தடுத்த படி நிலைகளுக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணியே இவற்றைப் பகிர்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:17, 25 சூன் 2017 (UTC) நன்றி திரு ரவி அவர்களே... விக்கியாக்கம் தகவல்கள் மிகவும் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது. அடுத்த கட்டுரைகளில் முயற்சிக்கிறேன். செய்த தவறுகளை பார்க்கும்போது இன்னும் பொறுமையாக கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்பதை உணர்கிறேன்.−முன்நிற்கும் கருத்து TNSE JOHN VLR (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
நீங்களே ரசித்தேன் என்று கூறியிருப்பதால் தலை கால் புரியவில்லை. மிக மிக மகிழச்சி. விக்கிபீடியாவிற்கும் தமிழுக்கும் தொடர்ந்து பணியாற்ற உங்கள் ஊக்கமளிக்கும் பேச்சு உற்சாகத்தை தருகிறது. பாராட்டுகள்வணக்கம். ஜான். 80 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை உருவாக்கியுள்ளதற்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். துவக்க காலகட்டம் என்பதால் ஆங்கில விக்கிப்பீடியாவிலுள்ள குறுங்கட்டுரைகளாகத் தேடிப்பிடித்து தமிழில் மொழிபெயர்த்துள்ள உங்களது உத்தியும், மொழிபெயர்ப்புக் கருவிகள் எதையும் பயன்படுத்தாமல் சொந்தமாக மொழிபெயர்ப்பு செய்யும் நேர்த்தியும், தொடர்ந்து கட்டுரைகளை உருவாக்கும் ஆர்வத்துடன் கூடிய உங்களது உழைப்பும் என்னை இங்கு உங்களது பேச்சுப்பக்கத்திற்கு அழைத்து வந்துள்ளது. வாழ்த்துகள். இனிவரும் கவனத்திற்கு எனது பரிந்துரைகள்:
நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:58, 26 சூன் 2017 (UTC) தங்களின் பேச்சுக்கு மிகுந்த நன்றி. சரியான நேரத்தில் எனக்கு தங்களின் ஆலோசனைகளை அளித்து இருக்கிறீர்கள். வருங்காலத்தில் அதை செயற்படுதுவேன் என்று உறுதி கூறுகிறேன். எப்போதும் தங்களின் ஆலோசனைகளை எனக்கு தரவும். நன்றி. பதக்கம்
பதக்கம்
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for votersGreetings, The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page. You can also verify your eligibility using the AccountEligiblity tool. MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC) Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters. |
Portal di Ensiklopedia Dunia