தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி
வணக்கம், Uthayai!
உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.
மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.
பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:
நீங்கள் உருவாக்கிய கட்டுரையை விரிவாக எழுதலாம். மேலும் பல கட்டுரைகளைத் தொடங்கலாம்.
ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம். அவற்றை விரிவாக்கலாம்.
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.
வணக்கம், உங்கள் அண்மைய தொகுப்பில் பேணுகை வார்ப்புருக்களை நீக்கியுள்ளீர்கள். ஒரு பேணுகை வார்ப்புருவை நீக்கும்போது, அதில் குறிப்பிட்ட சிக்கல் தீர்ந்துவிட்டதா எனக் கவனிக்கவும். அல்லது தொகுப்புச் சுருக்கத்தில் செல்லுபடியாகும் காரணத்தைக் குறிப்பிடுங்கள். நீங்கள் தவறுதலாக இதனைச் செய்திருந்தால் வருந்தவேண்டாம். உங்கள் தொகுப்பை நான் மீளமைத்துள்ளேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO13:35, 14 ஆகத்து 2016 (UTC)Reply
Welcome to Wikipedia. A page you recently created may not conform to some of Wikipedia's guidelines for new pages, so it will be removed shortly (if it hasn't been already). Please use the sandbox for any tests, and consider using the Article Wizard. For more information about creating articles, you may want to read Your first article. You may also want to read our introduction page to learn more about contributing. Thank you. AntanO13:41, 14 ஆகத்து 2016 (UTC)Reply
அக்கட்டுரை குறிப்பிடத்தக்கதல்ல. தயவுசெய்து அவ்வாறான கட்டுரைகளை உருவாக்காதீர்கள். நீங்கள் உருவாக்கிய வெடியரசன் போன்ற கட்டுரைகளை உருவாக்கலாம் அல்லது மேம்படுத்தலாம். நன்றி. குறிப்பு: சார் போன்று இங்கு யாரையும் அழைப்பதில்லை. நன்றி. --AntanO13:44, 14 ஆகத்து 2016 (UTC)Reply
ஆர்தி ரணா பற்றிய கட்டுரையில் இருவரும் ஒரே தகவல்களை மீண்டும் மீண்டும் எழுதி வருகிறீர்கள். எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. குறிப்பிடத்தக்கமையோடு கட்டுரை எழுதுங்கள்.--Kanags\உரையாடுக09:57, 20 ஆகத்து 2016 (UTC)Reply
Kanags::Shriheeranஆர் தி ரானா கட்டுரையை எழுதியதற்காக என்னை அன்ரன் அவர்கள்தொகுக்கமுடியாமல் தடை செய்திருக்காக்கார் முனறு மாதங்களுக்கு. அவரே தொடர்நது ஆர் தி ரானா கட்டுரையை யும் அழிகின்றார் நான் ஓரளவு குறிப்பிடதன்மையோடு தான் எழுதியிருந்தேதன் . அதனால் அன்ரன் அவர்கள் நிர்வாக தரத்திலீருந்து நடுநிலையாக செயற்படவில்லை என்பதை அறிந்து கொன்டேன் . இதனால் தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைள் அவர் கடைபிடிக்கவில்லை என்பதை நான் கருதகிறேன் . தங்களின் ஆதரவை எதிர்பாகின்றேன்Uthayai (பேச்சு) 00:02, 1 ஏப்ரல் 2017 (UTC)Reply
நிச்சயமாக இல்லை, அவரின் செயற்பாடு சரியானதே என்பது என் எண்ணம். தாங்கள் உருவாக்கிய நபர் குறிப்பிடத்தக்க அளவிற்கு பிரபலம் இல்லை என எண்ணுகின்ரேன். அவ்வாறு பிரபலமானவர் எனின் போதிய உசாத்துணைகளை தருவதற்கு வேண்டுகின்றேன். RT rana எனும் ஆங்கிலக் கட்டுரையும் ஆங்கிலவிக்கிப்பீடியாவில் குறிப்பிடத்தகைமை நிறுவப்படாததால் நீக்கப்பட்டுள்ளதை இன்று அவதானித்தேன். தனக்கள் முடிந்தளவு ஆங்கில விக்கிப்பீடியாவில் இருக்கும் கட்டுரைகளையும் மொழிபெயர்த்துத் தமிழ் விக்கிப்பீடியாவிற்குக் கொண்டுவரலாம். வாழ்த்துகள், நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:46, 1 ஏப்ரல் 2017 (UTC)Reply
தடை நீங்கியதும் பயனுள்ள பங்களிப்பினை வழங்குங்கள். தொடர்ந்தும் கலைக்களஞ்சியம் இல்லாத கட்டுரைகளை உருவாக்குவீர்களானால் நிரந்தரத் தடைக்கு உள்ளாகலாம். --AntanO10:27, 1 ஏப்ரல் 2017 (UTC)Reply
தடை நீங்கியதும் பயனுள்ள பங்களிப்பினை வழங்குங்கள். தொடர்ந்தும் கலைக்களஞ்சியம் இல்லாத கட்டுரைகளை உருவாக்குவீர்களானால் நிரந்தரத் தடைக்கு உள்ளாகலாம்.
காரணம் ஆர் தி ரானா கட்டுரையை பிற பயனுனர்களின் அனுமதியை பெற்று நீக்குமாறு விக்கிபீடியா ஆலமரத்தடியில் எழுதியும் கருத்தில் கொள்ளாது தனது நிர்வhக அதிகாரத்தை பயன்படுத்தி அழித்துள்ளார் எனது கேள்வி மேற்படி கட்டுரையை ஏன் அவர் கருத்தொற்றுமைக்கு வாய்ப்பு வழங்குவதில்லை? முக்கியமாக இவர்தான் இக் கட்டுரையை எப்பொழுதும் அழிப்பதனால் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. அவர் ஆர் தி ரானா மீதி தனிப்பட்ட காழ்புணர்சி கொள்டுள்ளார் போல இருப்பது எனக்கு தோணுகின்றது மேற்படி கட்டுரை யை தொகுத்தற்காக எனது பக்கத்தை முடக்கியுள்ளார். நீங்கள் அக்கடடுரையை சிறந்த கடடுரை என்று சொன்னது குறிப்பிடதக்கது. ஆலமரத்தடி குறிப்பில்Uthayai (பேச்சு) 14:52, 1 ஏப்ரல் 2017 (UTC)Reply
Kanags::::Natkeeran ::::Ravidreams ::::Mayooranathan ::::Info-farmer ::Kanags ஐயா நான் ஆர்தி ரானா கட்டுரையை 9 மாதங்களிற்கு முன்பு முதலில் தொகுத்த போது நீங்கள் அழித்து குறிப்பிட தன்மையை நிறுவுமாறு கூறியிருந்தீர்கள் . அதன் பின்பு மீண்டும் கடந்தவாரம் குறிப்பிடதன்மையை ஓரளவு சேர்த்து எழுதியிருந்தென் நீங்கள் பார்தீர்கள் ஆனால் அழிக்கவில்லை. ஏனைய இரு விக்கிபீடியர்களும் அக் கட்டுரையை தொகுத்தார்கள். பின்பு நிர்வாகி அன்ரன் அவர்களால்மேற்படி கட்டுரை அழிக்கப்பட்டும் எனது தொகுத்தல் முடக்கப்பட்டும் உள்ளது
தமிழ் விக்கிபீயாவில் கட்டுரை தொகுப்புக்கள் என்பன நான் செய்துள்ளேன். நான் அநாகரிகமாக நடந்து கொள்ளவில்லை. ஆர்தி ரானா கட்டுரையை நான் இரண்டு தடவைகள மட்டுமே தொகுத்துள்ளேன். பிற பயனுனர்கள் நிறைய தடவை ஆர்தி ரானா கட்டுரையை தொகுத்து அழித்ததற்றகாக எனது தொகத்தலை தடை செய்வவது என்பது தமிழ் விப்கிபீடியாவில் கட்டுரை வரையம் ஆற்றலை தடுப்பதாகவே அமைகின்றது. இதை தமிழ் விக்கபீடியாவின் அதிகாதிகள் கவனத்திற்கும் கொண்டுவருவதோடு தமிழ் விக்கபீடியா என்பது எல;லோருடைய ஒற்றுமையான செயற்பாடடே இதில் தனியான முடிவு தன்னிச்சையாக எடுக்கப்படகின்றது எனும் போது கவலை தருகின்றது. இது எழுதியதற்கும் எனது பேச்சு பக்கமும் நிர்வாகி அன்ரன் அவர்களால் கண்டிப்பாக முடக்கப்படும் நன்றி Uthayai (பேச்சு) 05:38, 2 ஏப்ரல் 2017 (UTC)Reply
ஆர் தி ரானா கட்டுரையை காண இயலவில்லை. அதனால் என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். உங்களது மணல் தொட்டி என்ற பகுதியில் வேறு புதிய கட்டுரை ஒன்றை உருவாக்குங்கள். அதில் தேவைப்படும் மாற்றங்களை தொடர்ந்து வழிகாட்டுகிறேன். தமிழுக்கான செறிவான தகவல்களை இணைத்து, குறைந்த பட்சம் 5வரிகள் உள்ள கட்டுரையை உருவாக்குங்கள். தமிழுக்கு வேண்டியதை எண்ணி செயற்படுவோம். பலரும் கற்றே வருகின்றனர். அதிகாரி, நிருவாகி என்ற சொற்களின் பொருள் மிக எளிமையானது. தமிழக அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பொருளை இங்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றவை பிறகு .. பொதுவெளியில் மாற்றுக் கருத்து ஏற்படுவது இயல்பே. தமிழுக்காக தொடர்ந்து பங்கு கொள்ளக் கோருகிறேன். ஒரு கட்டுரையையோ, இங்கு செயற்படும் செயற்பாட்டாளர்களையோ விமர்சனம் செய்வதால், தமிழ் பிறர் மொழிகளோடு போட்டி போட முடியாது. நம்மொழி பிறமொழியினரை விட முந்திச் செல்ல, ஏராளமான அடித்தளப்பணிகள் செய்ய வேண்டி உள்ளன. உங்களது திறன் யாதெனக் கூறினால், அது சிறக்க எனது அனுபவத்தை பகிர முடியும். இடபக்கம் உள்ள தமிழ் விக்கிமீடியத் திட்டடங்கள் பலவற்றைக் காணவும். ஓங்குக தமிழ் வளம்! வணக்கம்.--த♥உழவன்(உரை)05:57, 2 ஏப்ரல் 2017 (UTC)Reply
Info-farmer #வெடியரசன் எனும் கட்டுரையை நான் எழுதியுள்ளேன். ஆர்தி ரானா எனும் கட்டுரையும் குறிப்பிட தன்மையோடு தான் எழுதியிருந்தேன்
இக்கட்டுரை ஓரு தனிநபரால; மட்டுமே அழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அண்ணா. அதற்கு அப்படி அழிப்பதாயின் கருத்தொற்றமை எட்டப்பட்டு நீக்கப்படலாம் அதுவே நியாயமானது. அதை ஆரமரத்தடியிலும் குறிப்பாக இட்டேன் அதற்கும் அதரவு கிடைத்தது பின்பு அழிக்கப்பட்;டுள்ளது . பொதுவாக தமிழ் விக்கிபிடியாவில் இருக்கும் ஏனைய தமிழ் அறிவிப்பாளர்களுடை விக்கிபிடியா போதிய உசாத்துணைகள் இல்லாமல் சேமிக்கப்பட்டுள்ளது நான் அவதானிததுள்ளேன் .ஆர்தி ரானா எனும் கட்டுரை ஏரளவு சேர்த்து எழுதியிருந்தும் ஓரு நபர் மட்டும் அழிப்பதும் அந்த பக்கத்தை எழுதுவரை தடைசெய்வது சந்தேகத்தை ஏற்படுத்தியது . அதை கேட்தும் எனது பேச்ச பக்கத்தை தடை செய்ய முயற்சிப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது நன்றி அண்ணா தங்கள் பதிலுக்கு.Uthayai (பேச்சு) 06:22, 2 ஏப்ரல் 2017 (UTC)Reply
ஒரு கட்டுரை உருவாக்கப்படும் போதும், நீக்கப்படும் போதும் அந்தந்த பயனர்களுக்கு அறிவிப்பு இட்டு மாற்றங்களைக் கோருவது பல விக்கிகளில் நடைமுறையில் உள்ளது. நீக்குதலுக்கும் சில நாட்கள் தரப்படுகிறது. நமது தமிழ் சமூகத்திலும் அத்தகைய நிலைவரின், நமது பயனர் எண்ணிக்கை அதிகமாகும் என்பதை பல சூழ்நிலையில் எண்ணி ஏங்கியிருக்கிறேன். புதியவற்றை நான் நீங்கள் என அனைவரும் உடனே ஏற்றுக் கொள்வதில்லை என்பதே தற்போதைய நிலை. ஒவ்வொருவரும் குறிப்பிட்ட பதிவுகளை மட்டுமே செய்வதே நம் மொழி வளர்ச்சிக்கான தடையாக உள்ளதாக நான் எண்ணுகிறேன். எனவே, அன்பு வேண்டுகோள். என்னவெனில் பொதுவெளியில் நம் மொழியின் வளர்ச்சியை மட்டுமே எண்ணவும். பல பயனர்கள் பேச்சுப்பக்கத்தைத் தவிர்த்து, கட்டுரை வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளனர். நான் அவர்களின் அடியை பின்பற்ற விரும்புகிறேன். நீங்களும் உடன் இணையவும். நமது பதிவுகள் அனைவராலும் விரும்ப பாடுபடுவோம். அதற்கு பல மொழியினர் செயற்பாடுகளை கவனிக்க வேண்டும். முடிந்தால் அவர்களோடு இணைந்து வேறு பல பணிகளை செய்ய முற்படுங்கள். நாம் நம்மை மாற்றிக் கொள்வது எளிது. பிறரின் மனநிலை அறிதல்/மாற்றுவது கடினம். இத்துடன் இந்த உரையாடலில் இருந்து விடைபெறுகிறேன். வணக்கம்.த♥உழவன்(உரை)06:44, 2 ஏப்ரல் 2017 (UTC)Reply
Your ability to edit this talk page has been revoked as an administrator has identified your talk page edits as inappropriate and/or disruptive.
If you think there are good reasons why you should be unblocked, you should read the guide to appealing blocks, then contact administrators by submitting a request to the Unblock Ticket Request System. If the block is a CheckUser or Oversight block, was made by the Arbitration Committee or to enforce an arbitration decision (arbitration enforcement), or is unsuitable for public discussion, you should appeal to the Arbitration Committee. Please note that there could be appeals to the unblock ticket request system that have been declined leading to the post of this notice.
மேலும், விக்கித்திட்டங்கள் பலவற்றில் ஐ.பி முகவரியூடாகவும் குறித்த கட்டுரைகள் சில உருவாக்கப்பட்டிருக்க, அவற்றில் பல அழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்ந்தால் உங்கள் ஐ.பி முகவரியும் உலகளாவிய தடைக்கு உட்படலாம் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். காண்க: Q29837035 --AntanO09:21, 11 சூன் 2017 (UTC)Reply