பிசு(2-குளோரோயெத்தில்)சல்பைடு (Bis(2-chloroethyl)sulfide) என்பது (ClCH2CH2)2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல்சேர்மம் ஆகும். கடுகு முகவர்கள் எனப்படும் செல்நச்சு மற்றும் கொப்புள முகவர்களின் குடும்பத்தில் பிசு(2-குளோரோயெத்தில்)சல்பை ஒரு முக்கிய உறுப்பினராகும். சில நேரங்களில் கடுகு வாயு என்று குறிப்பிடப்படும் இந்த சொல் தொழில்நுட்ப ரீதியாக தவறானது: பிசு(2-குளோரோயெத்தில்)சல்பைடு அறை வெப்பநிலையில் ஒரு திரவமாகும். போரில் இது திரவ துளிகளின் மெல்லிய மூடுபனி வடிவத்தில் சிதறடிக்கப்பட்டது.[4][5]
தயாரிப்பு
பிசு(2-குளோரோயெத்தில்)சல்பைடு பல்வேறு வழிகளில் தயாரிக்கப்படுகிறது. தெப்ரெட்சு தயாரிப்பு முறையில், கந்தக டைகுளோரைடுஎத்திலீனுடன் சேர்த்து சூடுபடுத்தப்படுகிறது:
SCl2 + 2C2H4 -> (ClC2H4)2S
இலெவின்சுடீன் செயல்முறையில் கந்தக இருகுளோரைடுக்குப் பதிலாக டைசல்பர் டைகுளோரைடு பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது.[6] பின்னர் இச்செயல்முறை மறுக்கப்பட்டுள்ளது.[7]
மேயர்–கிளார்க்கு தயாரிப்பு முறையில், PCl3 சேர்மத்திற்குப் பதிலாக செறிவூட்டப்பட்ட ஐதரோகுளோரிக் அமிலம் (HCl) பயன்படுத்தப்படுகிறது:
(HOC2H4)2S + 2HCl -> (ClC2H4)2S + 2 H2O
தயோனைல் குளோரைடு மற்றும் பாசுச்சீன் ஆகியவை மூச்சுத் திணறலைத் தடுக்கும் காரணிகளாகவும் குளோரினேற்றும் முகவராகவும் பயன்படுத்தப்படுகின்றன. அதிக அளவில் பயன்படுத்தப்பட்டால் இந்த சேர்மங்கள் கூடுதல் நன்மையைக் கொண்டுள்ளன. அவை விளைபொருளில் அசுத்தங்களாகவே இருக்கும் என்பதால் அவை நச்சுத்தன்மையின் கூடுதல் வழிமுறைகளை உருவாக்க முடியும்.
தோலுடன் தொடர்பு கொள்ளும்போது அல்லது உள்ளிழுக்கும்போது, பிசு(2-குளோரோயெத்தில்)சல்பைடு என்பது ஒரு நச்சுப் பொருளாகும். இது ஒரு வலுவான ஆல்க்கைலேற்றும் முகவருமாகும். இது டிஎன்ஏ, ஆர்என்ஏ மற்றும் புரதங்களைப் பாதிக்கிறது.[10]
மேற்கோள்கள்
↑FM 3–8 Chemical Reference handbook, US Army, 1967