பாசுபரசு முக்குளோரைடு
பாசுபரசு முக்குளோரைடு அல்லது பாசுபரசு டிரைகுளோரைடு (Phosphorus trichloride) என்பது பாசுபரசு, குளோரின் ஆகிய தனிமங்களைக் கொண்ட ஒரு சேர்மம் ஆகும். மூலக்கூறு வாய்பாடு PCl3 ஐக் கொண்ட இச்சேர்மம் முக்கோணப் பட்டைக்கூம்பு வடிவில் காணப்படுகிறது. குளோரினுடன் பாசுபரசு வினை புரிந்து மூன்று வகையான சகப்பிணைப்பு சேர்மங்களாகிய பாசுபரசு குளோரைடுகளைக் கொடுக்கிறது. இவற்றில் பாசுபரசு முக்குளோரைடு முக்கியமானதாகும். வேதித் தொழிற்துறையில் பல்வேறு கரிம பாசுபரசு கலவைகள் உற்பத்தி செய்யவும் இது பயன்படுத்தப்படுகிறது. தயாரிப்புபாசுபரசை ஒரு நீர்த்தொட்டியில் வைக்கப்பட்டுள்ள வெப்பப் படுத்தும் கலனில் எடுத்துக் கொண்டு உலர்ந்த குளோரின் வாயுவை அதன் வழியாகச் செலுத்தினால் பாசுபரசு முக்குளோரைடு ஆவியாக வெளியேறுகிறது. உலக பாசுபரசு முக்குளோரைடு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இம்முறையிலேயே தயாரிக்கப்படுகிறது[2]. இவ்வாயுவை உறைகலவையினுள் வைக்கப்பட்ட கலத்தினுள் செலுத்தினால் நீர்மமாக மாறுகிறது. மேலும் வெண் பாசுபரசு மீது செலுத்தி மீண்டும் காய்ச்சி வடித்தால் இதர பாசுபரசு குளோரைடு மாசுக்கள் நீக்கப்படுகின்றன.
பாசுபரசு முக்குளோடு தொழில்முறையாக உற்பத்தி செய்யபடுவதை அட்டவணை 3ல் பட்டியலிட்டு, இரசாயன ஆயுதங்கள் மாநாடு தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேலும் அம்மாநாடு குறைவான நச்சுத்தன்மை கொண்ட சிவப்பு பாசுபரசை[3] பயன்படுத்தவும் பரிந்துரை செய்கிறது. இதை செயற்கையாக தயாரிக்க முடியாது என்றாலும் ஆய்வக பயன்பாட்டுக்கு மலிவாக கிடைக்க் கூடியதாக உள்ளது. இயற்பியல் பண்புகள்
வேதியியல் பண்புகள்ஆக்சிசனேற்ற - ஒடுக்க வினைகள்பாசுபரசு பெண்டா குளோரைடு (PCl5), தயோ பாசுபோரைல் குளோரைடு (PSCl3), அல்லது பாசுபரசு ஆக்சிகுளோரைடடு (POCl3) ஆகியவற்றுடன் ஆக்சிசனேற்றம் பெற்று ஏனைய பாசுபரசு சேர்மங்கள் தயாரிப்பிற்கான முன்னோடியாக PCl3 விளங்குகிறது. பாசுபரசு முக்குளோரைடு ஆவியும் ஐதரசன் வாயுவும் கலந்த கலவையில் மின்சுமை செலுத்தப்பட்டால் டைபாசுபரசு டெட்ராகுளோரைடு (P2Cl4) என்ற அரிய பாசுபரசு குளோரைடு உருவாகிறது. மின்னணு கவரியாக PCl3கரிம பாசுபரசு சேர்மங்கள், குறிப்பாக பாசுபைட்டு மற்றும் பாசுபோனேட்டு போன்றவை தயாரிப்பிற்கு பாசுபரசு முக்குளோரைடு முன்னோடியாக விளங்குகிறது.பொதுவாக இச்சேர்மங்களில் பாசுபரசு முக்குளோரைடில் உள்ள குளோரின் அணுக்கள் காணப்படுவதில்லை. நீருடன் வேகமாக வினைபுரிந்து பாசுபரசு அமிலம் மற்றும் ஐதரசன் குளோரைடு வாயுவைத் தருகிறது.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia