பீம்கட் வனவிலங்கு சரணாலயம்
பீம்கட் வனவிலங்கு சரணாலயம் (Bhimgad Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் பெல்காவி மாவட்டத்தின் கானாப்பூர் வட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். இந்த காட்டுயிர் காப்பகம் சுமார் 19,042.5 எக்டேர் (73.523 சதுர மைல்) பரப்பளவு கொண்ட வெப்பமண்டல, மிதவெப்ப மண்டல ஈரப்பதமான அகன்ற இலைக் காடுகளைக் கொண்டது. இப்பகுதி திசம்பர் 2011-இல் காட்டுயிரி காப்பகமாக அறிவிக்கப்பட்டது.[1] பீம்கட் காடுகள் பாராபீட் குகைகளுக்காக பெயர் பெற்றவை ஆகும். இது உரோட்டனின் தனித்த வால் உடைய வௌவால் சிற்றினத்தின் ஒரே இனப்பெருக்கப் பகுதியாகும். இவ்வினம் அழிந்து போகும் விளிம்பில் உள்ள ஒரு சிற்றினமாகும். இந்தக் காட்டுயிரி காப்பகம் பிற அரிய தாவரங்களுக்கும் விலங்கினங்களுக்கும் இருப்பிடமாக உள்ளது.[2] சொற்பிறப்பியல்17-ஆம் நூற்றாண்டில் பேரரசர் சிவாஜியால் கட்டப்பட்ட பீம்கட் கோட்டை இப்பகுதியில் உள்ளதால் இதன் பெயரைக் இக்காப்பகம் பெற்றது. இது வனப் பள்ளத்தாக்கின் மையத்தில் அமைந்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் கோவாவைக் கட்டுப்படுத்தும் போர்த்துகீசிய துருப்புக்களிலிருந்து பாதுகாப்பதற்காக சிவாஜியால் இக்கோட்டை கட்டப்பட்டது. சமவெளிகளுக்கு மேலே செங்குத்தாக 1800 அடி உயரத்தில் உள்ளது. செங்குத்தான உயரத்தில் 300 அடி (91 மீ) பக்கங்களைக் கொண்ட ஒரு அசாதாரண பாறையின் உச்சியை இந்தக் கோட்டை ஆக்கிரமித்துள்ளது. இக்கோட்டைக்கான பாதுகாப்பு கிட்டத்தட்ட முற்றிலும் இயற்கையானது. சிறிய அளவு கூடுதல் கட்டுமானம் மட்டுமே தேவைப்பட்டது. சுமார் 380 அடி உயரமும் 825 அடி அகலமும் கொண்ட பீம்கட் கோட்டையின் இடிபாடுகள் மகதாயி காட்டின் மையத்தில் அமைந்துள்ளன. மேலும், இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.[3] புவியியல்பீம்கட் காட்டுயிரி காப்பகம், பெல்காமிலிருந்து 35 கிமீ (22 மைல்) தென்மேற்கிலும் வோல்போய் நகரத்திலிருந்து 10 கிமீ தொலைவிலும் உள்ளது. இது மஹாதேய் வனவிலங்கு சரணாலயத்தின் கிழக்கிலும் பகவான் மகாவீர் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசிய பூங்கா ஆகியவற்றிற்கு வடமேற்கிலும் கோவாவில் உள்ள நேத்ராவலி வனவிலங்கு காப்பகத்தின் வடக்கிலும் கருநாடகாவில் உள்ள தண்டேலி வனவிலங்கு காட்சியகத்தின் வடக்கிலும் அமைந்துள்ளது.[2] மேற்கு எல்லைப் பகுதிகள் பல குகைகளுடன் பல புவிசார் சுண்ணாம்புக்கல் அமைப்புகளை உள்ளடக்கியது.[4] ஆறுகள்மஹாதேய், மலப்பிரபா, தில்லாரி உள்ளிட்ட பல ஆறுகள் மற்றும் நூற்றுக்கணக்கான வற்றாத நீரோடைகளின் முகப்பாக இந்தப் பகுதி உள்ளது. மஹாதேய் நதி பீம்கட் காடுகளில் 30 நீரூற்றுகளின் தொகுப்புடன் உருவாகி, மேலும் இரண்டு நீரோடைகளான மார்சிதா நாலா, பன்னேரா நாலா ஆகியவற்றுடன் இணைகிறது. பள்ளத்தாக்கில் நீர் கீழே பாய்கிறது. இங்கிருந்து 150 அடிக்கு (46 மீ) மேல் வச்ரபோஹா நீர்வீழ்ச்சி உள்ளது. முகட்டின் மீது விழும் மாலை சூரியன் ஒரு பிரகாசமான காட்சியைத் தருகிறது, எனவே வஜ்ரா என்று பெயர். மஹாதேய் நதி கோவாவின் முக்கியமான மாண்டோவி நதியாக உள்ளது.[5]இந்தப் பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவிப்பது கோவாவின் நீர்வள ஆதாரங்களுக்கு பாதுகாப்பை வழங்கியுள்ளது.[2] விலங்கினங்கள்வனப்பகுதிகள் மற்றும் புல்வெளிகளின் அழகான தளத்தைக் கொண்ட இந்தச் சரணாலயம், புலிகள், சிறுத்தைகள், இந்தியக் காட்டெருது, தேன் கரடி, கடமான், புள்ளி மான், நரிகள், காட்டு நாய்கள், நாகப்பாம்புகள் யானைகள், பிற அச்சுறுத்தலுக்குள்ளான பாலூட்டிகள், பறவைகள், ஊர்வனவற்றின் தாயகமாக உள்ளது. காடுகள் முக்கியமான புலிகள் வாழ் தாழ்வாரங்களின் ஒரு பகுதியாகும். ஒரு இணைப்பானது மகாராட்டிராவில் உள்ள தண்டேலி வனவிலங்கு சரணாலயம், ராதாநாக்ரி வனவிலங்கு காப்பகம் ஆகியவற்றை இணைக்கிறது, மற்றொன்று தண்டேலியையும் மோலெம் வனவிலங்கு பூங்காவையும் இணைக்கிறது.[2][6] தாவரங்கள்இந்தச் சரணாலயம் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல ஈரப்பதமான அகன்ற இலைக் காடுகள் மற்றும் புல்வெளிகளின் தளம் ஆகும். இங்கு ஏராளமான மருத்துவ மூலிகைத் தாவரங்கள் உள்ளன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia