பேச்சு:சிற்றூர் வட்டம்

நாளிதழ்களில் இந்த ஊர் "சித்தூர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிற்றூர், சித்தூர் இரண்டில் எது சரியானது என்ற குழப்பம் எழுகிறது. தெரிந்த பயனர்கள் உதவவும்.--Booradleyp1 (பேச்சு) 16:26, 2 சனவரி 2015 (UTC)Reply

அம்மையே, குழம்ப வேண்டாம். கேரளத்தில் உள்ள ஊரை ’சிற்றூர்’ என்றே குறிப்பிடுகிறோம். இது chittur. இதன் பெயரால் உள்ள மாவட்ட உட்பிரிவை சிற்றூர் வட்டம் என்கிறோம். ஆந்திரத்தில் உள்ள ஊரை ’சித்தூர்’ என்றே குறிப்பிடுகிறோம். இது chittoor. இதன் பெயரால் உள்ள மாவட்ட உட்பிரிவை சித்தூர் மண்டலம் என்கிறோம். இரண்டும் வேறு வேறானவை. கேரளத்தில் உள்ளதை சிற்றூர் என்று சொல்வதே சரி. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:30, 2 சனவரி 2015 (UTC)Reply
சிற்றூர் என்பதை ஈழத்திலும் மலையாளத்திலும் சிட்டூர் என்றே உச்சரிக்கிறார்கள் என்பது உபரி செய்தி ;) --மணியன் (பேச்சு) 17:49, 2 சனவரி 2015 (UTC)Reply
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya