பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு 2013
23வது பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு (23st Commonwealth Heads of Government Meeting, CHOGM) 2013 நவம்பர் 15 முதல் 17 வரை இலங்கையின் கொழும்பு நகரில் இடம்பெறுகிறது.[1] 2009 ஆம் ஆண்டில் திரினிடாட், டொபாகோவில் இடம்பெற்ற மாநாட்டில் 2013 ஆம் ஆண்டில் மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டது. 2011 இல் ஆத்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற மாநாட்டில் இது மீண்டும் உறுதி செய்யப்பட்டது. பொதுநலவாய நாடுகளின் தலைவர் என்ற வகையில் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இம்முறையே முதற்தடவையாக உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. 87 வயது மகாராணியின் உடல்நிலை காரணமாக இவருக்குப் பதிலாக வேல்சு இளவரசர் சார்லசு கலந்து கொள்வார் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்தது.[2] ஒன்றியொதுக்கல்இலங்கையில் மனித உரிமைகளில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் இலங்கை மாநாட்டில் தாம் பங்கேற்கப் போவதில்லை என கனடாவின் பிரதமர் ஸ்டீவன் ஆர்ப்பர் அறிவித்துள்ளார். இவருக்குப் பதிலாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தீபக் ஒப்ராய் கலந்து கொள்கிறார்.[3] அத்துடன் இலங்கைக்கு எதிராக பொதுநலவாயம் நடவடிக்கை எதுவும் எடுக்காத பட்சத்தில், தமது நாடு அவ்வமைப்பிற்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்தப்போவதாகவும் கனடியப் பிரதமர் எச்சரித்துள்ளார்.[4][5][6] இதே காரணத்துக்காக ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையின் வெளியுறவுத் துறைக் குழுவும் பிருத்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனாலும், தாம் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதாகவும், இலங்கைக்கான தமது பயணத்தின் போது இலங்கைத் தமிழர் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாணத்திற்கும் தாம் செல்லப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.[7] இந்திய அரசு இம்மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது எனவும், இலங்கையை பொதுநலவாய அமைப்பில் இருந்து தற்காலிகமாக நீக்க இந்திய அரசு கோர வேண்டுமெனவும், 2013 அக்டோபரில் தமிழ்நாடு சட்டமன்றம் ஏகமனதாகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது[8][9][10][11]. இதன் மூலம் இந்தியப் பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு பதில் இந்தியாவின் சார்பாக நவம்பர் மாதம் 12ம் நாள் இந்திய நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. சல்மன் குர்சித் கலந்து கொள்ளவதாக அறிவிக்கப்பட்டது[12]. ஆனால் இம்மாநாட்டிற்கு, இந்தியாவின் சார்பாக யாரும் பங்கேற்கக்கூடாது, பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பின் தலைவராக இலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்சவை நியமிக்கக்கூடாது, மேலும் பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்க வேண்டும் என்பனவற்றை மீண்டும் வலியுறுத்தி, 2013 நவம்பர் மாதம் 12ம் நாள் தமிழ்நாடு சட்டமன்றம் ஏகமனதாகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது[13]. நியூசிலாந்தின் பசுமைக் கட்சியும் மாநாட்டை அந்நாடு புறக்கணிக்க வேண்டும் எனக் கோரி வருகிறது.[14][15] . இந்தக் கட்சியானது இலங்கையில் நடந்த மற்றும் நடக்கும் மனித உரிமை மீறல்கள் காரணமாக, இலங்கை அரசு மாநாட்டுக்குத் தலைமை தாங்குவதை நியூசிலாந்து அரசு எதிர்க்க வேண்டும் என்ற கருத்துப்பட, தொடர்பான பல கேள்விகளை தமது அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது[16][17]. மலேசியாவிலும் இந்த மாநாடு புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசுக்கு வைக்கப்பட்டுள்ளது[18]. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றின் காரணமாக, மொரீசியசு நாடும் இம்மாநாட்டை புறக்கணிக்கின்றது[19][20]. மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள்
மாநாட்டு நிகழ்வுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia