போடிநாயக்கனூர் தொடருந்து நிலையம்
போடிநாயக்கனூர் தொடருந்து நிலையம் (Bodinayakkanur railway station, நிலையக் குறியீடு:BDNK) இந்தியாவின், தமிழ்நாட்டின், தேனி மாவட்டத்தில், உள்ள போடிநாயக்கனூரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வே மண்டலத்தின், மதுரை கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது இந்த தொடருந்து நிலையமானது, இந்நகரத்தை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கிறது. அமைவிடம்இந்த நிலையம், போடிநாயக்கனூர் சுபுராஜ் நகரில் உள்ள இரயில்வே நிலைய சாலையில் அமைந்துள்ளது. இதன் அருகிலேயே போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள வானூர்தி நிலையம், 87 கிலோமீட்டர் (54 மைல்) தொலைவில் உள்ள மதுரை வானூர்தி நிலையம் ஆகும். வழித்தடம்மதுரையிலிருந்து, உசிலம்பட்டி வழியாக போடிநாயக்கனூர் வரை ஒற்றை வழித்தடம் உள்ளது. தற்போது இது குறுகிய இருப்புப் பாதையிலிருந்து, அகல இருப்புப் பாதையாக மாற்றப்படுகிறது. குறுகிய இருப்புப் பாதைகள் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளன. வரலாறுபோடிநாயக்கனூர் - மதுரை வரை, 90 கி.மீ கிளை வழித்தடத்துடன் நவம்பர் 20, 1928 ஆம் ஆண்டு மதராசு மாகாண வருவாய் உறுப்பினர் நார்மன் மார்ஜோரிபங்க்சால் குறுகிய இருப்புப் பாதையாக திறக்கப்பட்டது.[1] பின்னர் 1942 ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போரின் போது, இவ்வழித்தடம் மூடப்பட்டு, இருப்புப் பாதைகள் அகற்றப்பட்டன. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, 1953–1954க்கு இடையில், இருப்புப் பாதைகள் மீட்டெடுக்கப்பட்டது.[2] பின்னர் குறுகிய இருப்புப் பாதை (1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்குலம்)) முதல் அகல இருப்புப் பாதை (1,676 மிமீ (5 அடி 6 அங்குலம்)) வரை பாதை மாற்றத்திற்காக மதுரை - போடிநாயக்கனூர் பாதை அனுமதிக்கப்பட்டது. இது சனவரி 1, 2011 அன்று மூடப்பட்டது, 2012க்குள் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்த்தது, ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக, இந்த திட்டம் மிக மெதுவான வேகத்தில் முன்னேறியது. இறுதியாக, 2020 சனவரி 23 அன்று, இரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின், சோதனை ஓட்டம் நிறைவேற்றிய பின்னர், மதுரை சந்திப்புக்கும் - உசிலம்பட்டிக்கும் (37 கி.மீ) இடையேயான முதல் பாதை திறக்கப்பட்டது.[3] மீதமுள்ள 53 கி.மீ. உசிலம்பட்டி - போடிநாயக்கனூர் வரை, 2020 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேவைகள்சனவரி 2020 நிலவரப்படி, தொடருந்து சேவைகள் இல்லை.[4] மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கூறுகையில், தொடருந்து சேவையானது 2020 பிப்ரவரி இறுதிக்குள் உசிலம்பட்டிக்கும், ஏப்ரல் மாதத்திற்குள் போடிநாயக்கனூர் வரையிலும், பாதை மாற்றும் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.[5][6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia