மாமிசக்கறிகளின் பட்டியல்![]()
இறைச்சி (Meat) என்பது பொதுவாக உணவாகப் பயன்படுத்தப்படும் விலங்குத் தசைகளைக் குறிக்கும்.[1] விலங்குகளின் தசைகள், மற்றும் அவற்றின் உறுப்புகளான நுரையீரல், கல்லீரல் போன்றவையும் இதில் அடங்கும். இறைச்சியை மட்டுமே உண்ணும் விலங்குகள் ஊனுண்ணிகள் என்று அழைக்கப்படுகின்றன. மனிதர்கள் அனைத்துண்ணி என்பதால் இதனை உணவாக உட்கொள்கின்றனர்.[2][3][4] இறைச்சி என்பது நீர், புரதம், கொழுமியம் மூலக்கூறுகளால் ஆனது. முன்பு இது பச்சையாக உண்ணக்கூடியதாக இருந்தாலும் பொதுவாக பல்வேறு வழிமுறைகளில் சமைத்த பின்னரோ அல்லது பதப்படுத்தியோ உண்ணப்படுகிறது. சமைக்கப்படாத இறைச்சியானது சில மணி நேரத்தில் கெட்டு அல்லது அழுகி விடும். சில நாட்களாயின் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் ஆகியவை இறைச்சியில் பெருகி அதை அழித்துவிடும். வரலாறுமுந்தைய மனிதர்களின் உணவில் கணிசமான விகிதத்தை இறைச்சி கொண்டிருந்ததாக தொல்லுயிரியல் சான்றுகள் தெரிவிக்கின்றன.[1]:2 பண்டைய வேட்டையாடிகள் மற்றும் இறைச்சி சேகரிப்பாளர்கள் அமைப்பு ரீதியான வேட்டையாடும் முறைகளைக் கொண்டு பெரிய விலங்குகளான காட்டெருது மற்றும் மான் போன்றவற்றை இறைச்சிக்காக நம்பியிருந்தனர்.[1]:2 பனி யுகத்தின் கடைசிக்கட்டங்களில் (கிமு 10,000) விலங்குகளை மனித இனம் பழக்கப்படுத்துதல் செயல் நிகழ்ந்ததற்கான தடயங்கள் நமக்கு கிடைக்கின்றன. திட்டமிடப்பட்ட அமைப்பியல் ரீதியான இறைச்சி உற்பத்தியை மேம்படுத்துவதற்காக விலங்குகளை வளர்த்தல் மற்றும் அவற்றைப் பெருக்குதல் போன்ற செயல்முறைகள் கடைபிடிக்கப்பட்டன. ஆரம்பகால நாகரிகங்களின் வளர்ச்சியுடன் தொடர்புடைய இந்த முறைகளே தற்பொழுதும் மனித இனம் இறைச்சிக்காக நம்பி இருக்கும் மூல ஆதாரமாகும். ![]()
யப்பான், அலாஸ்கா, சைபீரியா, கனடா, பரோயே தீவுகள், கிறீன்லாந்து, ஐஸ்லாந்து, செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள், இந்தோனேசியாவில் உள்ள இரண்டு சிறிய சமூகங்கள் ஆகியவற்றில், திமிங்கிலலங்கள் மற்றும் ஓங்கில்கள் இரண்டையும் பிடித்து, அவற்றின் ஒரு மொத்த பகுதி உடலும் சதைகளுக்காக வேட்டையாடுகின்றன மற்றும் உண்ணப்படுகின்றன.[7] நுகர்வுமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia