மெத்தில் வினைல் ஈதர்
மெத்தில் வினைல் ஈதர் (Methyl vinyl ether) என்பது C3H6O என்ற மூலக்கூற்று வாய்பாடும் CH3OCH=CH2 என்ற வேதியியல் வாய்ப்பாடும் கொண்ட ஒரு கரிம சேர்மமாகும். நிறமற்ற வாயுவான இது ஓர் எளிமையான ஈனால் ஈதர் என்று வகைப்படுத்தப்படுகிறது. அறை வெப்பநிலையில் நீர்மமாகக் காணப்படும் எத்தில் வினைல் ஈதர் போலவே இதுவும் ஒரு செயற்கை கட்டுமானத் தொகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. தயாரிப்புஒரு காரத்தின் முன்னிலையில் அசிட்டிலீன் மற்றும் மெத்தனாலை வினைபுரியச் செய்து மெத்தில் வினைல் ஈதரை தயாரிக்கலாம்.[2][3] வினைகள்மெத்தில் வினைல் ஈதர் மூலக்கூறின் ஆல்க்கீன் பகுதி பல வழிகளில் வினையாற்றுகிறது. இப்பண்பு பலபடியாக்கல் வினைக்கும் பாலிவினைல் ஈதர்களை உருவாக்கவும் வழிவகுக்கிறது. பலபடியாக்கல் வினை பொதுவாக போரான் முப்புளோரைடு போன்ற இலூயிசு அமிலங்களைக் கொண்டு தொடங்கப்படுகிறது..[4] வினைல் அசிடேட்டு மற்றும் வினைல் குளோரைடு ஆகியவற்றை பலபடியாக்கம் செய்து முறையே பாலிவினைல் அசிடேட்டு மற்றும் பாலிவினைல் குளோரைடை உருவாக்குவது போன்ற வினைத்திறன் முறையை இவ்வினையும் ஒத்ததாக உள்ளது. மெத்தில் வினைல் ஈதர் [4+2] வளையக்கூட்டு வினைகளிலும் பங்கேற்கிறது.[5] அக்ரோலின் உடனான இதன் வினை குளுடரால்டிகைடை வணிக ரீதியாகத் தயாரிக்கும் முறையின் முதல் படியாகும். ஆக்சிசனை ஒட்டிய வினைல் கார்பனில் ஆல்க்கீனை புரோட்டான் நீக்கம் செய்ய இயலும்.[6] குறிப்பாக, இந்த அணுகுமுறை சிலிக்கான், செருமேனியம் மற்றும் வெள்ளீயம் ஆகியவற்றின் பல்வேறு அசைல் வழிப்பெறுதிகளை தயாரிக்க அனுமதிக்கிறது. இவற்றை மற்ற வழிகளில் எளிதாக உருவாக்க முடியாது.[7][8][9] நச்சுத்தன்மைவினைல் ஈதர்களின் நச்சுத்தன்மை பெரிதும் ஆராயப்படுகிறது. ஏனெனில் இருவினைல் ஈதர் ஒரு மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மெத்தில் வினைல் ஈதரின் உயிர் கொல்லும் அளவு 4 கி/கி.கி (எலிகள், வாய்வழி) என்பதை விட அதிகமாக உள்ளது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia