ராஜபார்வை (தொலைக்காட்சித் தொடர்)
ராஜபார்வை (Raja Paarvai)[2] என்பது 22 மார்ச்சு 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை பகல் 1 மணிக்கு ஒளிபரப்பான குடும்பம் காதல் நாடகத் தொடர் ஆகும்.[3][4] இது 'சஞ்சர் பாத்தி' என்ற வங்காள மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும். இந்த தொடர் 'ரிஷி' என்பவர் இயக்கத்தில் 'முன்னா ரஹ்மான்' மற்றும் 'ரெஸ்மி ஜெயராஜ்' ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க 'கேத்ரின் சோபா' என்பவர் ரேடேபைனிங் என்டேர்டைன்மென்ட் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.[5] இந்த தொடர் 18 திசம்பர் 2021 அன்று 207அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. கதை சுருக்கம்ஆனந்த் என்ற பணக்கார வீட்டு இளைஞன் ஒரு விபத்துக்குப் பிறகு பார்வை இழக்கிறான். தனது முத்தமகனின் மகனின் விபத்திற்கு இரண்டாவது மகனான அரவிந்த் தான் கரணம் என அவன் மீது கோபமும் வெறுப்பும் காட்டும் தாய் மகாலட்சுமி. ஆனால் அண்ணன் தம்பி இருவரும் மிகவும் பாசமானவர்கள் ஒரு நாள் கூட தம்பியை பிரியாத ஆனந்த். இப்படி இவர்கள் வாழ்க்கை சென்றுகொண்டு இருக்கும் தரு வாயில் சாரு என்ற நடுத்தர குடும்பத்து பெண் மீது காதல் கொள்ளும் ஆனந்த். இவனின் வாழ்வில் சாரு வந்த பிறகு நடக்கும் மௌனம் சார்ந் காதலை இந்த தொடர் விளக்குகின்றன. நடிகர்கள்முதன்மை கதாபாத்திரம்
சாரு குடும்பத்தினர்
ஆனந்த் குடும்பத்தினர்
துணைக் கதாபாத்திரங்கள்
நடிகர்களின் தேர்வுநாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் நடித்த 'ரெஸ்மி ஜெயராஜ்' என்பவர் இந்த தொடரின் மூலம் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் நடிக்கின்றார். இவர் திருமணத்திற்கு பிறகு நடிக்கும் முதல் தொடர் இதுவாகும்.[10] இவருக்கு ஜோடியாக தெலுங்கு மற்றும் தமிழ் தொலைக்காட்சி நடிகர் 'முன்னா ரஹ்மான்' என்பவர் நடிக்கின்றார். இவர் இந்த தொடரில் நடிப்பதற்காக சந்திரலேகா[11] என்ற தொடரில் இருந்து விலகி இந்த தொடரில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.[12] மதிப்பீடுகள்கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia