26 மார்ச் 2018 (2018-03-26) – 10 சூன் 2022 (2022-06-10)
Chronology
தொடர்புடைய தொடர்கள்
ஆர்த்திகோபா கீர்த்திகோபா
நாம் இருவர் நமக்கு இருவர் என்பது விஜய் தொலைக்காட்சியில் 26 மார்ச்சு 2018 முதல் 10 சூன் 2022 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இதன் முதல் பருவம் 29 மார்ச் 2018 முதல் 27 மார்ச் 2020 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி, 579 அத்தியாயங்களுடன் கொரோனா வைரசு தொற்று நோய்காரணமாக நிறுத்தம் செய்யப்பட்டது . இந்த பருவத்தில் செந்தில் குமார் என்பவர் அண்ணன், தம்பியாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் இவர்களுக்கு ஜோடியாக 'ரக்ஷா' மற்றும் 'ரேஷ்மி' ஆகியோர் நடித்துள்ளார்கள்.[1][2]
இதன் இரண்டாம் பருவத்தில் செந்தில் குமார் என்பவர் 'மாயன்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக மோனிஷா அர்ஷக் என்பவர் 'மகாலட்சுமி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த தொடர் 27 ஜூலை 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி 10 சூன் 2022 அன்று 476 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
இந்த தொடர் கன்னட மொழியில் ஆர்த்திகோபா கீர்த்திகோபா என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு டிசம்பர் 23, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஸ்டார் சுவர்ணா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. தமிழில் அரவிந்த் மற்றும் மாயன் நடித்த கதாபாத்திரத்தில் தேஜஸ் கவுடா என்பவர் அஜய் மற்றும் விஜய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர் தமிழில் கல்யாணமாம் கல்யாணம் என்ற தொடரில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.