ரூகொல்லா கொமெய்னி
ஆயதுல்லா ரூகொல்லா மூசவி கொமெய்னி (Sayyid Ruhollah Mūsavi Khomeini, Persian: سید روحالله موسوی خمینی, 24 செப்டம்பர் 1902 – 3 சூன் 1989) ஓர் ஈரானிய அறிஞரும், இசீயா முசுலிம் மதத் தலைவரும், மெய்யியலாளரும், புரட்சியாளரும், அரசியல்வாதியும், ஈரான் இசுலாமியக் குடியரசின் நிறுவனரும் ஆவார். 1979இல் இவரால் துவங்கப்பட்ட ஈரானியப் புரட்சியை அடுத்து 2500-ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரசீகப் பேரரசு முடிவுக்கு வந்து ஈரானின் கடைசி அரசர் (ஷா) முகம்மத் ரிசா ஷா பஹ்லவி பதவி இழந்தார். ஈரானியப் புரட்சிக்குப் பின்னர் இவர் ஈரானின் அதியுயர் தலைவராக 1979 முதல் 3 சூன் 1989 வரை இருந்தார். இவருக்குப் பின்னர் ஈரானின் அதியுயர் தலைவராக 1989 முதல் அலி காமெனி பதவியில் உள்ளார். 1979 டைம் ஆண்டு நபராக அமெரிக்க டைம் செய்தி இதழால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்,[9] இசுலாமின் மீட்கைக்கு வழிகோலியதாக சியா மற்றும் சுன்னி மக்களால் ஒருசேர[10] மிகவும் விரும்பப்பட்ட கவர்ச்சி வாய்ந்த தலைவர் எனக் கருதப்பட்டார்.[11]. இளமைப் பருவம்இவர் 1903 -ல் தனது தந்தையாரின் மறைவிற்குப் பின் தாயாரின் பராமரிப்பில் வளர்ந்தார். தனது 6 வது வயதில் பாரசீக மொழியில் குரானைக் கற்க ஆரம்பித்தார். பின்னர் பள்ளியில் மதக்கல்வி பயின்றார். தனது இளமைப் பருவத்தில் பெரும்பாலும் மதக்கல்வி கற்றார். இஸ்லாமிய சட்டக்கல்வியைக் கற்றறிந்தார். கவிதையிலும், தத்துவத்திலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. அவரது ஆசிரியர் 'மிர்ஸா முகம்மது அலி ஸஹஹபாடியின் தாக்கம் அவரிடம் இருந்தது. கொமேனி கிரேக்கத் தத்துவத்தைக் கற்றார். அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள் அவருக்குள் தாக்கத்தை ஏற்படுத்தின. 'அவிஸென்னா 'மற்றும் 'முல்லா ஸாட்ரா' ஆகிய இஸ்லாமிய தத்துவ ஞானிகளின் கருத்துகளே கொமேனியை அதிகளவு கவர்ந்தன. இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia