ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோயில்

ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோயில்
ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோயில் is located in தமிழ்நாடு
ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோயில்
ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோயில்
ஆள்கூறுகள்:10°24′52″N 77°50′49″E / 10.414445°N 77.847025°E / 10.414445; 77.847025
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திண்டுக்கல் மாவட்டம்
அமைவிடம்:ரெட்டியார்சத்திரம்
சட்டமன்றத் தொகுதி:ஆத்தூர் - திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:திண்டுக்கல் மக்களவைத் தொகுதி
ஏற்றம்:449 m (1,473 அடி)
கோயில் தகவல்
மூலவர்:கோபிநாத சுவாமி
தாயார்:கோப்பம்மாள்
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி,
கிருஷ்ண ஜெயந்தி,
புரட்டாசி சனிக்கிழமைகள்
உற்சவர்:கிருட்டிணர்

ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தின் ரெட்டியார்சத்திரம் புறநகர்ப் பகுதியில், ஒரு சிறு குன்றின் மீது அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 449 மீட்டர் உயரத்தில், 10°24′52″N 77°50′49″E / 10.414445°N 77.847025°E / 10.414445; 77.847025 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கோபிநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலின் மூலவர் கோபிநாத சுவாமி மற்றும் தாயார் கோப்பம்மாள் ஆவர். உற்சவர் கிருஷ்ணர். கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோரும் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். தலவிருட்சம் வேம்பு ஆகும். வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி[2] மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகள் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.[3]

மேற்கோள்கள்

  1. ValaiTamil. "அருள்மிகு கோபிநாத சுவாமி திருக்கோயில்". ValaiTamil. Retrieved 2023-08-18.
  2. மாலை மலர் (2019-08-27). "ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோவிலில் உறியடி திருவிழா". www.maalaimalar.com. Retrieved 2023-08-18.
  3. "Gopinathaswami Temple : Gopinathaswami Gopinathaswami Temple Details". temple.dinamalar.com. Retrieved 2023-08-18.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya